நயன்தாரா அம்மனா நடிச்ச என்ன பிரச்சனை. அப்போ இவங்க நடிச்சா ஏத்துப்பாங்களா? ஆர் ஜே பாலாஜி காட்டம்.

0
1093
mookuti

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

nayan

பல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து நடித்த நயன் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா தயங்குவது கிடையாது. இவர் கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி இயக்குணராக களமிறங்கி இருக்கும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அம்மன் படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்ண போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நயன் மட்டும் விரதமில்லை ஓட்டு மொத்த படக்குழுவும் விரதம் இருந்ததாம்.

nayan

இந்த படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆர் ஜே பாலாஜியிடன், நயன்தாராவை அம்மனா மக்கள் ஏத்துப்பாங்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அம்மனா நயன்தாரா நடிக்கிறதுல என்னதான் பிரச்னை? அப்ப த்ரிஷா நடிச்சா ஏத்துப்பாங்களா? சினேகா, தமன்னா, அனுஷ்கா, மஞ்சுவாரியர் நடிச்சா. எதுக்கு இந்த கேள்வினு புரியலை. மக்கள் நயன்தாராவை ஏத்துக்கிட்டதால்தான் 16 வருஷமா டாப் மோஸ்ட் ஸ்டாரா இருக்காங்க. அதனால அவங்க நடிச்சா மக்கள் ஏத்துப்பாங்க என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement