கதை கேட்டுட்டு அன்னிக்கி நைட் போன் பண்ணி அவங்க போட்ட கண்டிஷன் இதான் – ஆர் ஜே பாலாஜி.

0
2894
mookuthi

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா. தமிழில் பல முன்னணி நடிகர்கள் துவங்கி இளம் நடிகர்களுடன் நடித்த நடிகை நயன்தாரா லீட் ரோலில் நடித்த ஆரம், கோலமாவு கோகிலா, மாயா போன்ற பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது நடிகை நயன்தாரா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் அம்மனாக நடித்து வருகிறார்.

nayan

நயன்தாரா புராண ராமராஜ்யம், சாய்ரா நரசிம்ம ரெட்டி போன்ற புராண கதைகளில் நடித்திருந்தாலும் அம்மன் வேடத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் சினிமாவில் 15 வருடங்கள் கழித்து ஒரு முழு நீள அம்மன் படம் என்றால் அது இது தான் (பிக் பாஸ் ஜூலி அம்மன் தாயி படம் என்ன ஆச்சினு தெரியல பாஸ்). ஏற்கனவே நடிகை நயன்தாரா ராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்த போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மேலும், நயன்தாரா எல்லாம் சீதையாக நடிப்பதா என்று பல எதிர்ப்புகள் ஏழுந்தது.

இதையும் பாருங்க : ப்பா, சிறுத்தை சிவாவா இது. இதனால் வரை இந்த பிரபுதேவா படத்தில் நோட் செஞ்சிருக்கீங்களா ?

- Advertisement -

இருப்பினும் அந்த படத்தில் சிறப்பாக நடித்து நயன்தாரா மீண்டும் தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்து இருந்தார். இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்திற்கும் இதே நிலை தான். இந்த படத்தில் நடிகை நயன்தாரா ‘அம்மன்; வேடத்தில் நடிக்க போகிறார் என்று அறிவிப்பு வெளியான போதே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. அதே போல இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போதும் பல்வேறு ட்ரோல்களும் கிண்டல்களும் எழுந்தன. யார் யார் எல்லாம் அம்மன் வேடம் போடுவது என்று இல்லையா போன்ற விமர்சனங்கள் கூட எழுந்தது. சமீபத்தில் இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த ‘மூக்குத்தி அம்மன் ‘ பட இயக்குனர் ஆர் ஜே பாலாஜி, த அவர், அம்மனா நயன்தாரா நடிக்கிறதுல என்னதான் பிரச்னை? அப்ப த்ரிஷா நடிச்சா ஏத்துப்பாங்களா? சினேகா, தமன்னா, அனுஷ்கா, மஞ்சுவாரியர் நடிச்சா. எதுக்கு இந்த கேள்வினு புரியலை என்று அவரது ஸ்டைலில் பதில் அளித்திருந்தார்.

mookuti

மேலும், இந்த படத்தின் கதையை நயன்தாராவிடம் முதலில் சொன்ன போது, அன்று இரவே எனக்கு போன் செய்து, சாமி படம் செய்கிறோம் அதனால் சுத்தமாக இறந்து எல்லாம் சரியாக பண்ணவேண்டும் கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டாங்க எங்களுக்கும் அதே மன நிலை என்பதால் அவர் போட்ட கண்டிசன் பிடித்திருந்தது இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் மட்டும் அல்லாமல் யூனிட்டில் இருக்கும் 200 பேரும் அப்படித்தான் இருந்தார்கள் என்று கூறியுள்ளார்

-விளம்பரம்-
Advertisement