மாஸ்டர் படத்தால் என்னுடைய கேன்சல் ஆன படத்தின் ஷூட்டிங். மேடையில் சொன்ன நடிகர்.

0
3577
master
- Advertisement -

உலகில் அளவில் ரசிகர்கள் படையை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமாக தெறிக்க விட்டது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதனாலே படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ ப்ரேம், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் குட்டி கதை பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தினால் தான் தன்னுடைய படப்பிடிப்பு நடக்கவில்லை என்று ஆர் ஜே பாலாஜி அவர்கள் சமீபத்தில் பேட்டியில் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆர் ஜே வாக தனது பயணத்தை துவங்கியவர் பாலாஜி. தமிழ் சினிமா உலகிற்கு ஜெய் நடிப்பில் வெளிவந்த வடகறி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர் ஜே பாலாஜி. பின்னர் சினிமாவில் காமமெடி நடிகராக வலம் வந்தார். கடந்த ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல்.கே.ஜி. படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் ஆர்.ஜே. பாலாஜி படங்களில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் களம் இறங்கி உள்ளார்.

சமீபத்தில் இவர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஆர் ஜே பாலாஜி அவர்கள் இயக்கி நடிக்க இருக்கும் மூக்குத்தி அம்மன் படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியது, நான் இந்த விழாவிற்கு வருவதற்கு விஜய்யின் மாஸ்டர் படம் தான் காரணம். ஆமாங்க, என் படத்தில் ஒரு சண்டைக் காட்சி உள்ளது. ஆனால், விஜய் அவர்களின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பிற்கு ஸ்டண்ட் மாஸ்டர் சிவா அவர்கள் சென்று விட்டதால் என்னுடைய படப்பிடிப்பு நின்று விட்டது. அதனால் தான் இந்த விழாவில் என்னால் கலந்து கொள்ள முடிந்தது என்று வேடிக்கையாக கூறினார்.

-விளம்பரம்-
Advertisement