‘கங்குவா’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் அண்ணன் ஆவார். மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கங்குவா’.
இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் உருவாக்கி இருக்கிறார்.
கங்குவா படம் :
அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 20 மொழிகளில் வெளியாக இருக்கிறது. அக்டோபர் 10-ஆம் தேதியே இந்த படம் திரையரங்களில் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் ரீலிஸ் தள்ளிப்போனது. பின் இந்த படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. பிரம்மாண்டத்துடன், பின்னணி இசையில் மிரள வைக்கும் அளவிற்கு கங்குவா ட்ரைலர் இருக்கிறது. இதுவரை பார்த்திடாத அளவிற்கு சூர்யா நடித்திருக்கிறார்.
படம் குறித்த தகவல்:
போர், ரத்தம், பகை, பழிக்குப் பழி என்று ஒட்டுமொத்த ட்ரெய்லரும் கலவரமாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த கங்குவா இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சூர்யா குறித்து ஆர்.ஜே பாலாஜி பேசியிருந்தார். அதில், நான் காலேஜ் படிக்கும்போது சூர்யா சாரின் ‘காக்க காக்க’ படம் வந்தது. சூர்யா சார் நடித்து நான் பார்த்த முதல் படம் அதுதான். அந்தப் படத்தை தொடர்ந்து பிதாமகன், ஆயுத எழுத்து, கஜினி என நாலு படத்தையும் நான் காலேஜ் படிக்கும்போது பார்த்தேன். இப்படி திரையில் நான் பார்த்து வியந்த ஒரு நடிகர் தான் சூர்யா. இதே நேரு ஸ்டேடியத்தில் தான் நான் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். தற்போது சூர்யாவின் 45 திரைப்படத்தை இயக்குவதில் மிகவும் பெருமை அடைகிறேன்.
சூர்யா 45 குறித்து:
சூர்யா 45 போஸ்டர் சோசியல் மீடியாவில் வெளியானதும், ‘What are you cooking bro?’ என்று கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். சூர்யா 45 படம் பயங்கரமாக மாஸாக சமைத்து அடுத்த வருடம் உங்களிடம் தரப்படும். அதற்கு நான் கேரண்டி என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து பேசி ஆர்.ஜேபாலஜி, நான் சூர்யாவின் ரசிகன் என்பதால் இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். ஒரு அரசியல்வாதி என்பது வெறும் தேர்தலில் இருப்பது மட்டுமல்ல.
சூர்யா குறித்து ஆர்.ஜே பாலாஜி:
ஒரு தெருவில் மரம் விழுந்து விட்டால், அதை 4 பேராக சென்று அப்புறப்படுத்தி எடுத்து போடுபவரும் ஒரு அரசியல்வாதி தான். மக்களுக்கு நலம் செய்ய வேண்டும் என்று சிறிய எண்ணம் தோன்றி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் அவரும் அரசியல்வாதி தான். அந்த வகையில் சூரியா சார் அரசியல்வாதியாக மாறி பல வருஷம் ஆகிறது. இந்த அரசியலே உங்களுக்கு போதும் சார். அகரம் அறக்கட்டளை மூலமாக பல பேரை படிக்க வைத்து சூர்யா சார் 25 வருடங்களுக்கு முன்பே அரசியலுக்கு வந்துவிட்டார். இந்த அரசியலை அவருக்கு போதுமானது என ஆர்ஜே பாலாஜி பேசியுள்ளார்.