யாரையும் டார்க்கெட் பண்ணி அடிக்காதீங்க – சொர்க்கவாசல் பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி சொன்னது

0
197
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆர்.ஜே பாலாஜி திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொகுப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கி ‘புத்தகம்’ என்ற படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் எல்கேஜி படத்தின் மூலம் தான் ஆர்.ஜே பாலாஜி ஹீரோ ஆனார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து இவர் ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதை தொடர்ந்து இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சொர்க்கவாசல். இந்த படத்தை பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த சித்தார்த் விஸ்வநாத் என்பவர் தான் இயக்கி இருக்கிறார். இதுதான் இவருடைய முதல் படம். இந்த படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், நட்டி, ஹக்கிம் ஷா, சானியா ஐய்யப்பன், பாலாஜி சக்திவேல் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற 29ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்திருந்தது.

- Advertisement -

சொர்க்கவாசல் ட்ரைலர் வெளியீட்டு விழா:

இதில் கலந்து கொண்ட ஆர்.ஜே.பாலாஜி, ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏதாவது சர்ச்சையாக பேசினால் அந்த படம் ரீச் ஆக உதவும் என்று பேசுவார்கள். நான் தனிப்பட்ட முறையில் நினைப்பது, பேசுவது எதுவும் இல்லை என்றாலும் இப்போது நான் பேச நினைக்கும் விஷயம் மக்களிடம் ரீச் ஆகும் என்று நினைக்கிறேன். நான் 2006 இல் இருந்து ஒரு விஷயத்தை தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒரு பிஸ்கட்டை கடைக்கு விற்க கொண்டு சென்று விட்டோம் என்றால் அது நல்லா இருக்கா? இல்லையா? என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம். காரணம், அந்த பொருள் வெளியே போய்விட்டது. சினிமாவும் அது மாதிரி தான்.

ஆர்.ஜே.பாலாஜி சொன்ன அட்வைஸ்:

சினிமா என்ற பிஸ்கட் வெளியே வந்துவிட்டால் அது நன்றாகத்தான் இருக்கிறது, ச்சி ச்சி இது என்ன பிஸ்கட்? என்றெல்லாம் சொல்லலாம். இன்னும் சிலர், 10 பக்கத்திற்கு மேல் மெயில் அனுப்பலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம். நாம எல்லோருடைய ஃபோனையும் பிடுங்கி கண்ட்ரோல் பண்ண முடியாது. இந்த படத்தை மீடியா மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பதை போல தான் இந்த படத்தில் கன்டன்ட் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

-விளம்பரம்-

சினிமா குறித்து சொன்னது:

மேலும், வெளியே ஒரு இந்திய கொடி இருந்தது. அதை வைத்து போஸ் கொடுக்கலாம் என்று பார்த்தால் ஏதாவது பிராண்ட் பண்ணிடுவாங்களா? என்று பயமா இருக்கு. நாம் இந்தியன் தானே என்று தெரிகிறது. ஆனாலும், ஏதாவது சொல்லி விடுவார்களோ? என்ற பயமும் இருக்கிறது. சொர்க்கவாசல் ட்ரெய்லர்
நாளைக்கு வரப்போகிறது என்று நான் ஒரு போஸ்ட் போட்டேன். அதற்கு கீழே விநியோகஸ்தர் பெயர் போட்டேன். அவர் மீது உள்ள கோபத்தில் என்னை திட்டி கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். சிலர், இவன் ஒரு பாவாடை. இவன் படத்தை அடிக்கணும் என்று சொன்னார்கள்.

விமர்சனங்களுக்கு கொடுத்த பதிலடி:

நான் பாவாடை இல்ல, வேஷ்டி. நான் சங்கியும் கிடையாது. எந்த கட்சியோட ஐடி கிடையாது. உங்களுக்கு ஒரு கோரிக்கை தான். நீங்கள் அரசியல் பண்ணுங்க. வாரம் வாரம் ரிலீஸ் ஆகுற படத்தில் உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க. அதுக்காக உங்க அக்கவுண்டில் பணம் போடுறாங்க. போங்க போய் அரசியல்வாதிகளோடு சண்டை போட்டுக்கங்க. அதே மாதிரி ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா ரசிகர்கள் எல்லா படங்களையும் பார்க்கலாம். படம் நல்லா இல்லை என்றால் சொல்ல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், அவங்க படம் வந்தால் இவர்களை அடிக்கணும், இவங்க படம் வந்தால் அவர்களை அடிக்கணும் ஏன் நினைக்கணும்? ஏன் எனர்ஜியை வீணடிக்க வேண்டும். ஆனால், டார்கெட் பண்ணி அடிப்பது கொஞ்சம் பயமாக இருக்கிறது. அதை செய்யாதீர்கள். நாங்கள் ஒரு நல்ல படம் எடுத்திருக்கிறோம். லப்பர் பந்து, வாழை மாதிரி எல்லோரிடமும் போய் சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement