அமெரிக்காவிலிருந்து csk அணியை கலாய்த்த ஆர்.ஜே பாலாஜி ! வீடியோ உள்ளே

0
1862
rj-balaji

இந்த வருட ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் கடந்த இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் தனக்கான வீரரை தேடித்தேடி ஏலத்தில் எடுத்து வருகிறது. மேலும், இரண்டு வருடமாக தடை செய்யப்பட்டிருந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களம் இறங்கியுள்ளது.

rj balaji

இந்த ஏலத்தில் சென்னை அணி 30 வயதிற்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த வீரர்களையே பெரும்பாலும் தேர்வு செய்துள்ளது. டு பிலேசிஸ் (33), ஹர்பஜன் சிங் (37), டிவைன் பிராவோ (33), அம்பட்டி ராயுடு (33) அதுபோக தோனி (36), ரெய்னா (31) என 30 வயதிற்கு மேற்பட்ட வீரர்களை தேர்வு செய்துள்ளது.

இதனால் காமெடி நடிகர் ஆர்.ஜே பாலாஜி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்து கலாய்த்துள்ளார் பாலாஜி.

அந்த வீடியோவில்,

பொங்கலுக்கு முன்பு இருந்தே தமிழில் ட்வீட் போட்டுக்கொண்டிருந்த ஹர்பஜன் சிங் தற்போது சென்னை அணியில் இருக்கிறார். மேலும் அனைத்து வீரர்களும் 30 வயதிற்கு மேல் உள்ளார்கள், இது என்ன முதியோர் கிரிக்கெட்டா?

எனவும் அந்த வீடியோவில் கேட்டுள்ளார் ஆர்.ஜே பாலாஜி.