நடிகர் ஜெயம் ரவி தனது விவாகரத்து குறித்து யூடியூபர் ஆர்ஜே ஷாவிடம் பேசி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் ஜெயம் ரவி சில வாரங்களுக்கு முன் தன் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை அடுத்து இது தொடர்பாக ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன்.
இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறி இருந்தார். இதை அடுத்து ஜெயம் ரவி ஆர்த்தி பிறந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், ஜெயம் ரவி மற்றும் கெனிஷாவிற்கு இருக்கும் பழக்கத்தால் தான் பிரிந்தார்கள் என்றெல்லாம் பல செய்திகள் வருகின்றது.
ஆர்ஜே ஷா வீடியோ:
இதற்கிடையில் நடிகர் ஜெயம் ரவி பிரபல யூடியூபர் ஆர்ஜே ஷாவை நேரில் அழைத்து பேசியுள்ளார். அந்த விஷயம் குறித்து தற்போது தனது சேனலில் ஆர்ஜே ஷா பேசியுள்ளார். அதில், நடிகர் ஜெயம் ரவி என்னை பர்சனலாக மீட் பண்ண வேண்டும் என்று சொன்னார். அப்போது அவரிடம் நான் பேசினேன். அப்போது அவர் தன் பக்கத்தில் உள்ள சில விஷயங்களை கூறினார். அதில் இந்த விவாகரத்து குறித்து எதுவும் தெரியாது என ஆர்த்தி சொல்வது எல்லாம் பொய். இந்த முடிவு எடுத்த பிறகு நான் விவாகரத்து நோட்டீசை அவர்களுக்கு இரண்டு வாட்டி அனுப்பினேன்.
ஜெயம் ரவி சொன்னது:
அதை அவர் பெற்றுக்கொண்டு கையெழுத்து போட்ட பிறகு தான் நான் எனது எக்ஸ் தளத்தில் என் விவாகரத்து குறித்து பதிவிட்டேன். அதற்கு முன்பே நான் எனது மூத்த மகனிடம் இது குறித்து தெளிவாக எடுத்துச் சொல்லி அவனுக்கு புரிய வைத்தேன். எனது இளைய மகனுக்கு இது குறித்து பேச விவரம் இல்லை என்று விட்டுவிட்டேன். மேலும், தற்போது நான் என் குழந்தைகளை தனியாக விட்டு சென்றதாக ஆர்த்தி புலம்புகிறார்.
அலையவிட்ட ஆர்த்தி:
ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் என் மகனின் பிறந்த நாளுக்காக நான் ITC ஹோட்டலில் காத்துக்கொண்டிருந்தேன். காலை முதல் மாலை வரை காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஆர்த்தி அதை தெரிந்தும் என் குழந்தைகளை கூட்டிக்கொண்டு ஸ்ரீலங்கா சென்று விட்டார். இதுவரைக்கும் என்னிடம் தனியாக பேங்க் அக்கவுண்ட் கூட கிடையாது. நான் எந்த செலவு செய்தாலும் அதற்கு ஆர்த்தி கணக்கு கேட்பார். ஆனால், அவர் தன் இஷ்டம் போல் செலவு செய்வார். இந்த விவாகரத்து முடிவு நான் எப்போ எடுத்திருந்தால் ஆர்த்தி யின் அம்மா தயாரிப்பில் நான் மூன்று படங்கள் நடித்தேன்.
விவாகரத்து முடிவு ஏன்:
ஆனால், அந்த படங்களில் பிராஃபிட் இருந்தும் லாஸ் என்று சொன்னார்கள் அதனால்தான் எனக்கு கோபம் வந்து பேச ஆரம்பித்து விட்டேன். நான் எங்கு சென்றாலும் அங்கு அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது. அதனால் தான் நான் ஸ்ட்ரெஸ்ஸில் தனியாக கோவா போனேன். அப்படி போகும் போது டோல்கேட் கிராஸ் பண்றப்போ கூட , மெசேஜ் ஆர்த்திக்கு போய்விடும். அப்படிதான் அவர்கள் நான் கோவா போனதை கண்டுபிடித்தார்கள் என்று ஜெயம் ரவி கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவி தனது instagram பாஸ்வேர்டு முதல் பாஸ்போர்ட் வரை ஆர்த்தியிடம் இருந்து திரும்பப் பெறுவதற்கு போலீசில் பெரிய கலவரம் நடந்ததாக கூறியுள்ளார்.