கேப்டன் பிரபாகரன் படத்தின் ரீ ரீலீஸ் குறித்து இயக்குனர் ஆர்.கே செல்வமணி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே பிரபல நடிகர்களின் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் படத்தை ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

கடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் வெளியான படம் தான் கேப்டன் பிரபாகரன். இந்த படத்தில் விஜயகாந்த், ரூபிணி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசை அமைத்திருந்தார். இந்த படம் திரையரங்கில் 300 நாட்களுக்கும் மேல் ஓடி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள்.
கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ்:
மேலும், இந்த படம் 34 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பது ஒட்டி பிலிம்பில் எடுக்கப்பட்ட இந்த படத்தை டிஜிட்டல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு மீண்டும் இன்று தமிழ்நாடு முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. புதிய படத்தைப் போலவே ரசிகர்கள் ஆரவாரத்துடன் கேப்டன் பிரபாகரன் படத்தின் முதல் காட்சியை கொண்டாடி தீர்த்திருக்கிறார்கள். அதோடு நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்தை திரையில் பார்ப்பதால் ரசிகர்கள் ரொம்ப எமோஷனல் ஆகி இருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=FOS7J2q3qAA
ஆர் கே செல்வமணி பேட்டி:
மேலும், இந்த படத்தின் ரீ ரிலீசுக்காக சென்னை கமலா திரையரங்கிற்கு இயக்குனர் செல்வமணி, மன்சூர் அலிகான், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் எல்லோருமே படத்தை பார்த்து கண்டு மகிழ்ந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் படம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் ஆர்கே செல்வமணி, 34 வருடங்களுக்கு முன்பு படத்தை எப்படி கைத்தட்டி கொண்டாடினார்களோ அதே போல் தான் இப்பவும் கொண்டாடி இருக்கிறார்கள். ஆனால், விஜயகாந்த் சார் தான் இந்த திருமணத்தில் இல்லை. அது மட்டும் தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் எங்களுடைய படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்து வருவதாக தகவல் சொன்னார்கள்.
https://www.youtube.com/watch?v=wYq6IO4bWRA
படம் பற்றி சொன்னது:
விஜய்காந்த் சார் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் திரையரங்குகளில் கைத்தட்டல்கள் பறக்கின்றது. ஆயிரம் நடிகர்கள் வேண்டும், 100 குதிரைகள் வேண்டும் என்று கேட்கும் போதெல்லாம் சலிக்காமல் எனக்கு அனைத்திற்கும் துணையாக இருந்த இப்ராஹிம் ராவுத்தாரையும் நான் மறக்க மாட்டேன்.
சண்முக பாண்டியன் நடித்திருந்த படத்தை எல்லாம் பார்த்திருந்தேன். விஜயகாந்த் சார் போல ஒரு இன்ச் கூட குறையாமல் நடித்திருக்கிறார். படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் படத்தை பற்றி நெகட்டிவ் எதுவுமே இல்லை. ஆனால், படத்தினுடைய பிரிண்ட், ஒவ்வொரு ஃபிரேம்களையும் மெருக்கேற்றி இப்போது வெளியிட்டு இருக்கிறோம்.
https://www.youtube.com/watch?v=zyuNxh7bbms
கேப்டன் பிரபாகரன் 2:
சில வருடங்களுக்கு முன்பு நான் கேப்டன் பிரபாகரன் 2 படத்தை எடுக்கலாம் என திட்டமிட்டேன். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருந்தேன். ஆனால், அந்த சமயத்தில் புஷ்பா படம் வெளியானதால் அதை அப்படியே நிறுத்திவிட்டேன். இப்போது இந்த படத்தை பார்க்கும்போது பலர் புஷ்பா படத்தின் உடைய காட்சிகள் போல இருக்கிறது என்று சொல்கிறார்கள். அந்த சமயத்தில் இரண்டாம் பாகத்திற்கு கதாநாயகன் கிடைக்கவில்லை. இன்று சண்முக பாண்டியன் என் முன் இருக்கிறார். அவரை வைத்து இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்






