‘அவர மாதிரி ஒரு ஈகோவான மனிதனை பார்க்க முடியாது’ – மம்முட்டி குறித்து ஆர் கே செல்வமணி.

0
181
- Advertisement -

மம்முட்டி ஒரு ஈகோ பிடித்த மனிதர் என்று ஆர் கே செல்வமணி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் ஆர்கே செல்வமணி. இவர் இயக்கத்தில் வெளிவந்திருந்த புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இவர் திரை இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.

-விளம்பரம்-

இதனிடையே இவர் தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். தற்போது ரோஜா அவர்கள் ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், செல்வமணி அவர்கள் பெப்சியின் தலைவராக இருநக்கிறார்.

- Advertisement -

செல்வமணி குறித்த தகவல்:

பல பிரச்சனைகளின் போது சினிமா ஊழியர்களுக்கு பக்கம் நின்று இவர் ஆதரவாக பேசி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட ஆர்கே செல்வமணி அவர்கள் பெப்சி தொழிலாளர்களை கருத்தில் கொண்டு அஜித், விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் பேசி இருந்தார். இந்நிலையில் மம்மூட்டி குறித்து இயக்குனர் செல்வமணி அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, இயக்குனர் ஆர் கே செல்வமணி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

செல்வமணி அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருந்தது, புது முகங்களை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டேன். நான் இயக்கிய மூன்றாவது படத்தில் கதாநாயகன் இல்லாமல் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மேலும், மலையாள நடிகர் மம்முட்டி மாதிரி ஒரு ஈகோவான மனிதனை பார்க்க முடியாது. அவ்வளவு ஈகோ உடைய மனிதர். ஆனால், அவர் ஒரு சிறந்த மனிதரும் ஆவார். தமிழ் சினிமாவுலகில் ஒரு காலத்தில் எப்படி விஜய்காந்த் உச்ச நடிகராக இருந்தாரோ அதே மாதிரி தான் மம்முட்டியும் இருந்தார்.

-விளம்பரம்-

மம்முட்டி குறித்து சொன்னது:

ஆனால், ஒழுக்கத்தில் சிறந்தவர். ஈகோ கொஞ்சம் அதிகம். நான் மம்முட்டியுடன் படம் பண்ணதில்லை. இதற்கு முன் பணியாற்றியதும் இல்லை. இரண்டு நாள் வொர்க் சூட்டிங் அவருடன் செய்தோம். எட்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் சூட்டிங் தொடங்கினோம். நான் பல தோல்வி படங்களை கொடுத்த பிறகு மம்முட்டி இடம் ஒரு கதை சொன்னேன். அவரும் கதையை ஓகே செய்யலாம் என்று சொன்னார்.

மம்முட்டி செய்த உதவி:

பின் அவர் அட்வான்ஸ் வேண்டாம். உங்களுக்கு கஷ்டமாக இருக்கும் என்றார். அதோடு எனக்கு அவர் 40 லட்சம் கொடுத்து படம் எடுக்க சொன்னார். அந்த பணத்தை படம் வெளியான பிறகு திரும்ப கொடுத்தால் போதும் என்றார். எவ்வளவு பேர் இதை செய்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவர் எனக்கு செய்தார். அந்த நட்பு இன்றும் வரை எங்களிடம் இருக்கிறது என்று கூறி இருந்தார்.

Advertisement