எனக்கு தெரியாத அரசியல்வாதியே இந்தியால கிடையாது – ஆருத்ரா மோசடி குறித்து முதன் முறையாக பேசிய RK சுரேஷ்.

0
245
- Advertisement -

ஆருத்ரா மோசடி விவகாரம் குறித்து முதன் முறையாக மேடையில் பேசி இருக்கிறார் ஆர் கே சுரேஷ். சென்னை அமைந்த கரைப்பகுதியில் ஆருத்ரா கோல்ட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக நிறுவனம் அறிவித்திருந்தார்கள். இதனை நம்பி லட்சக்கணக்கான மக்கள் முதலீடு செய்திருந்தனர். ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை அந்த நிறுவனம் திருப்பி கொடுக்கவில்லை. அதோடு இந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து 2438 கோடி முதலீடாக பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த நிறுவனம் பண மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த மோசடியில் பாஜகவின் ஓபிசி பிரிவு துணைத் தலைவராக இருக்கும் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கையில் எடுத்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆர்.கே.சுரேஷுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் ஆஜராகாத ஆர்.கே.சுரேஷ் திடீரென தலைமறைவானார்.

- Advertisement -

இந்நிலையில் வெளிநாட்டிலிருந்த ஆர்.கே.சுரேஷ் துபாயிலிருந்து கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி சென்னை திரும்பினார். அவரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் டிசம்பர் 12 ஆம் தேதி விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் யார் யாருக்கெல்லாம் இந்த மோசடியில் தொடர்பு இருக்கிறது என்பது விசாரணைக்கு பின் வெளியே வரும் என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் காடுவெட்டி படத்தின் பேசிய ஆர் கே சுரேஷ் ‘ கடந்த ஒன்றரை வருசமா என்ன பத்தி கற்பனையான கட்டுக்கதைங்க வந்துட்டே தான் இருந்தது. ஒரு பக்கம் அதையெல்லாம் பார்த்து நான் சிரித்தாலும், சில விஷயங்கள் என் மனசை மிகவும் புண்படுத்துச்சு. இப்படித்தான் ஒன்றரை வருடம் போச்சு, இதனாலதா நான் பத்திரிக்கையாளர்களை கூட சந்திக்கவே இல்லை.

-விளம்பரம்-

எனக்குத் தெரியாத அரசியல்வாதியே இந்தியாவில் கிடையாது. இதுதான் உண்மை எல்லா இடமும் ஒரு அண்ணன் தம்பியாக அனைத்து ஜாதி மக்களுடன் ஒரு பண்பாகவும் எல்லா கட்சிகளுடனும் ஒரு நல்ல பழக்கத்தில் இருப்பவன் நான். எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், நான் ஏதோ ஒரு கட்சியில் இருக்கிறேன் என்று. ஆனால் எல்லா கட்சியிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்.

எல்லா கட்சி தலைவர்களும் என்னுடன் பண்பாக இருக்கிறார்கள். அப்படி ஒரு சூழலில் என்னைப் பற்றி ஒரு தவறான விஷயம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. நான் அப்படி செய்திருப்பேனா ஒரு 15 வருடம் இருக்கும் ஒரு நடிகர் மீது கோர்ட் நோட்டீஸ் விட்டு ஏர்போர்ட்டில் அவரை போலீஸ் அழைத்துச் சென்று உள்ளே அமர வைத்து எஃப் ஐ ஆர் போட்டாள் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா

Advertisement