என் படம் 47 சர்வேதச விருது வாங்குச்சி, பாலிவுட்ல இருந்தெல்லாம் போன் பண்ணாங்க, ஆனா தமிழ்ல ஒருத்தரும் பாராட்ல – Rk சுரேஷ் வேதனை.

0
505
Visithiran
- Advertisement -

தமிழ் திரையுலையில் ஒருவர் கூட வாழ்த்தவில்லை என்று மனவேதனுடன் ஆர் கே சுரேஷ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தான் ஆர்.கே. சுரேஷ். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதற்கு பின் இவர் படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் ஹீரோவாக கலக்கி கொண்டு வருகிறார். இதனிடையே ஆர்கே சுரேஷ் அவர்கள் பைனான்சியர் மது என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கிறது. மேலும், சமீபத்தில் இவர் இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் வெளியாகி இருந்த விசித்திரன் படத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ஆர் கே சுரேஷ் நடித்த படம்:

இந்த படம் 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜோசஃப் படத்தின் தமிழ் ரீமேக். மலையாளத்தில் ஜோசஃப் படத்தை இயக்கிய இயக்குனர் பத்மகுமார் தான் தமிழில் விசித்திரன் படத்தை இயக்கியிருக்கிறார். ஆர்கே சுரேஷ் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இதில் பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

பட்டத்து அரசன் படம்:

இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்திருக்கும் படம் பட்டத்தரசன். இந்த படத்தில் அதர்வா, ராஜ்கிரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சற்குணம் இயக்கியிருக்கிறார். லோகநாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஆர் கே சுரேஷ் அளித்த பேட்டி:

லைக்கா ப்ரோடக்ஷன் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நடந்திருக்கிறது. இதில் பட குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள். அப்போது மேடையில் ஆர் கே சுரேஷ் கூறி இருப்பது, நான் நடித்த விசித்திரன் படத்திற்கு இதுவரை 47 சர்வதேச விருதுகள் கிடைத்து இருக்கிறது. 20 டொமஸ்டிக் விருதுகள் வந்திருக்கிறது.

விசித்திரன் படம் குறித்து சொன்னது:

அதுமட்டுமில்லாமல் போஜ்பூரி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி நடிகர்கள் போனில் அழைத்தும், நேரில் அழைத்தும் கூப்பிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். ஆனால், என்ன ஒரு வருத்தம் என்னவென்றால் தமிழில் இருந்து எந்த ஒரு கலைஞரும் வாழ்த்தவில்லை. இது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நான் தற்போது மலையாளம், கன்னடம், தெலுங்கு, போஜ்புரி என பழமொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும், தமிழில் விடக்கூடாது என்று நடிக்கிறேன், சரியான அங்கீகாரம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று வேதனையுடன் கூறியிருந்தார்.

Advertisement