கடந்தாண்டு முதல் குழந்தை, இப்போது இரண்டாவது – பிரபல நடிகரின் மனைவிக்கு வளைகாப்பு.

0
623
- Advertisement -

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேசுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அவர் மனைவி இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்தது வருகிறார். தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்கள் அதேபோல ஒரு சில நடிகர்கள் தங்களது பலத்தை தாங்களே தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர் ஆனால் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் விடிவு சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தவர் ஆர்கே சுரேஷ்.

-விளம்பரம்-
ஆர் கே சுரேஷ் மது

ஆர்.கே.சுரேஷின் இரண்டாவது திருமணம்:

பிறகு நடிகர் ஆர்கே சுரேஷ் அவர்கள் சினிமா பைனான்சியர் மது என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஸ்ரேயா என்ற ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் மது இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் தான் இவருக்கு வளைகாப்பு நடைபெற்று இருந்தது.

- Advertisement -

முதல் மனைவி, மகன் குறித்த பேட்டி:

ஆர் கே சுரேஷுக்கு சீரியல் நடிகை திவ்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமணம் நின்றுவிட்டதாக திவ்யா அறிவித்து இருந்தார்.இதுகுறித்து திவ்யா கூறிய போது, அவர் மிகவும் நல்ல மனிதர். ஆனால் எங்களுக்குல் நிறைய விஷயங்கள் வேறுபடுகிறது. மேலும் கருத்து வேறுபாடுகளும் உள்ளது. இந்த கருத்துவேறுபாடுகள் பெரிதாகி திருமணம் முடிந்து பெரும் பிரச்சனை வர வேண்டாம் என எங்களுக்குள் நாங்களே பேசி முடிவு செய்தோம்.

சுரேஷ் – திவ்யா காதல் :

இதனால் தான் திருமண நிச்சயம் ஆன பின்பும் திருமணம் வேண்டாம் என பிரிந்துவிட்டோம் என கூறி இருந்தார் திவ்யா. இப்படி ஒரு நிலையில் தான் மதுவை திடீர் திருமணம் முடித்தார் ஆர் கே சுரேஷ். இது ஒருபுறம் இருக்க கடந்த 2019 ஆம் ஆண்டு பேட்டி ஒன்றுஅளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, நான் ஒரு சிங்கிள் பேரண்ட் என்கிற விஷயம் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்களுக்கும், சினிமா துறையை சேர்ந்த சிலருக்கு மட்டும் தான் தெரியும்.என்னுடைய மகன் பெயர் கவின். அவனுக்கு தற்போது பதினோரு வயது ஆகிறது.

-விளம்பரம்-

முதல் மனைவி மற்றும் மகன் :

நானும் என் மனைவியும் 4 வருடங்களுக்கு முன்னாடியே பிரிந்துவிட்டோம். என்னுடைய மகன் கவின் அவன் அம்மா உடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நானும் கவினும் அடிக்கடி சந்திப்போம். ஆனால், அதற்கு அவங்க அம்மா எந்த ஒரு தடையும் சொல்லமாட்டார்கள். அவள் ரொம்ப தைரியமான பொண்ணு, நல்ல குணம் கொண்டவள். என்னோட பயனை நல்ல முறையில் வளர்த்து கொண்டு வருகிறார்.

நாங்கள் பிரிந்தாலும் நல்ல நண்பர்கள்:

மேலும், நாங்கள் இரண்டு பேருமே அன்பாக, பாசமாக கவின் மீது இருப்போம். எங்களுடைய விவாகரத்துக்குப் பிறகு நாங்கள் 2 பேருமே நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அவங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நான் அங்கே முதலாக போய் நிற்பேன். அவங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கூட நான் பண்ணுவேன். நாங்கள் ரெண்டு பேரும் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டாலும் எங்கள் நட்பு அப்படியே தான் இருக்கும் என்று கூறி இருந்தார்.

Advertisement