பார்வதி வீட்டில் திருட்டு, திருடு போன பொருட்களின் விவரம் – திருடியது யார் பாருங்க.

0
438
- Advertisement -

நடிகை பார்வதி நாயர் வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள் திருட்டு போயிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் அஜித், அருண்விஜய், த்ரிஷா, அனுஷ்கா ஷெட்டி, பார்வதி நாயர் ,விவேக் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் பார்வதி நாயர் தமிழ் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக பெற்று இருந்தார். அதேபோல இந்த படத்தின் மூலம் தான் அருண் விஜய்க்கு ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. என்னை அறிந்தால் படத்திற்கு முன்பாகவே தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில் ‘ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார் பார்வதி நாயர். இருந்தாலும், இவர் பிரபலமானது என்னவோ என்னை அறிந்தால் படத்தில் தான்.

- Advertisement -

அதன் பின் இவர் உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், வெள்ள ராஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த ஒரு வெப் சீரிஸிலும் பார்வதி நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் பாரி கே விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் வைபவ், முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இது முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பி சந்துரு தயாரிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து பார்வதி அவர்கள் ரூபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கிறார். இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இதனால் இவரை அதிகமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள் திருட்டு போயிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, நடிகை பார்வதி அவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் இரண்டு வருடமாக வேலை செய்த நபர் ஒருவர் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய இரண்டு கைக்கடிகாரம், லேப்டாப், செல்போன் போன்ற பொருட்களை திருடி சென்றிருக்கிறார்.

இந்த சம்பவம் அறிந்த நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.
நடிகை அளித்த புகாரில், அந்த நபர் 6 லட்சம் மதிப்பிலான கை கடிகாரம், 3 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், ஐம்பது ரூபாய் மதிப்புடைய லேப்டாப், செல்போன் போன்ற பல பொருள்களை திருடி சென்றிருக்கிறார். அவரை தேடி போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement