சொகுசு கார், சொகுசு பைக், கின்னஸ் ரெகார்ட் எல்லாம் வாங்கி என்ன பயன் – பிரபல நடிகரின் வீடு புகுந்து திருடிய கும்பல்.

0
729
rk
- Advertisement -

பிரபலமான தமிழ் நடிகரான ஆர் கே வீட்டில் அவருடைய மனைவியை கட்டிப்போட்டு 200 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை புதுமுக நடிகர்கள் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரு சிலர் மட்டும் தான் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சில படங்களில் நடித்தாலும் திரை உலகிலும், மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் ஆர்கே.

-விளம்பரம்-

இவர் 2008ஆம் ஆண்டு ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளிவந்த திகில் திரைப்படம் எல்லாம் அவன் செயல். இந்த படத்தில் ஆர்கே, ஆஷிஷ் வித்யார்த்தி, ரகுவரன், ரோஜா செல்வமணி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் ஆர்கே தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மட்டும் இல்லாமல் அழகான உச்சரிப்புடன் தமிழ் பேசும் ஹீரோவாகவும் ஆர்கே நடித்து இருந்தார்.

- Advertisement -

நடிகர் ஆர்கே திரைப்பயணம்:

இதை தொடர்ந்து இவர் அவன் இவன், என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ், புலிவேசம் என அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து இருந்தார். அது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை தக்க வைத்து இருந்தார். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் வெற்றிகரமான பிசினஸ்மேன் ஆவார். வழக்கமான ஒரு பிசினஸ்மேனாக இல்லாமல் ஏதோ ஒரு வகையில் மக்களின் அடிப்படைப் பிரச்சினை தீர்க்க புது விதமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இருக்கிறார்.

நடிகர் ஆர்கே கண்டுபிடிப்பு:

அதை பல தரப்பு சோதனைகளுக்குப் பிறகு அவற்றை மார்க்கெட்டில் சந்தைப்படுத்தி வெற்றிகரமான ஒரு கண்டுபிடிப்பாளராக வலம் வருகிறார். ஆ இவரும் அதைப்பற்றி பெரிதாக பெருமைப்படுத்திக் கொள்பவரும் இல்லை. சமீபத்தில் இவரது கண்டுபிடிப்பை பாராட்டி அதை அங்கீகரிக்கும் விதமாக மலேசிய, நைஜீரியா, பிரேசில் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மூலமாக 18 முனைவர் பட்டங்கள் நடிகர் ஆர்கேவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் ஒரு ஆடம்பர விரும்பி இவரிடத்தில் ரோல்ஸ் ராய்ஸ் முதல் சூப்பர் பைக் வரை அனைத்தும் இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட ஒரு நிகழ்ச்சிக்கு படு மாஸாக தன்னுடைய சூப்பர் பைக்கில் வந்திருந்தார்.

-விளம்பரம்-

ஆர் கே வீட்டில் கொள்ளை:

இந்நிலையில் நடிகர் ஆர் கே வீட்டில் கொள்ளை அடித்திருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, நடிகர் ஆர் கே அவர்கள் சென்னையில் நந்தம்பாக்கம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். சமீபத்தில் ஆர் கே மனைவி ராஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து ராஜியை கட்டி போட்டுவிட்டு 200 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து இருக்கின்றனர்.

போலீஸ் விசாரணை:

மொத்தம் இந்த திருட்டில் மூன்று பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், இது குறித்து நடிகர் ஆர்கே மனைவி போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை நடத்தி இருக்கின்றனர். அப்போது இந்த கொள்ளையில் ஆர்கே வீட்டின் காவலாளி உடந்தை என்பது சிசிடி கேமராவில் உள்ள காட்சிகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது. பின் காவலாளி உட்பட மூணு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement