எனக்கும் ரச்சிதாவுக்கும் இடையே காதலா? முதன்முறையாக மனம் திறந்த ராபர்ட் மாஸ்டர்

0
437
- Advertisement -

ரக்ஷிதாவிற்கும் தனக்கும் இடையேயான உறவு குறித்து முதன் முறையாக ராபர்ட் மாஸ்டர் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கி 49 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

-விளம்பரம்-

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி இருக்கின்றனர். மேலும், இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான சில முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் தான்.

- Advertisement -

ராபர்ட் மாஸ்டர் குறித்த தகவல்:

இவர் மிக பிரபலமான நடன இயக்குனர் ஆவார். ராபர்ட் மாஸ்டர் பற்றி முகம் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதா விஷயத்தில் தான். இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார் ராபர்ட் மாஸ்டர். ஆரம்பத்தில் இவர் சினிமாவில் நடன இயக்குனராக கொடி கட்டி பறந்து இருந்தார். பின் இடையில் இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக வராததால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர்:

பின் இவர் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதற்கு பின் தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் வைத்து இருக்கிறார். காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. ரக்ஷிதா என்ன செய்தாலுமே அதை மாஸ்டர் ரசித்துக் கொண்டே இருந்தார். ஆனால், ரக்ஷிதா அதை கண்டுகொள்ளாமல் தன் விளையாட்டில் கவனம் செலுத்தி இருந்தார். இதனால் இவரின் மீது பல விமர்ச்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.

-விளம்பரம்-

ராபர்ட் மாஸ்டர் பதிவிட்ட முதல் வீடியோ:

பின் கடந்த வாரம் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருக்கிறார். ஆரம்பத்தில் ராபர்ட் மாஸ்டர் ஸ்ட்ராங்கான போட்டியாளராக இறுதிவரை வருவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ரக்ஷிதா பின் சுற்றிக்கொண்டு செய்த சேட்டைகளால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்றிருக்கிறது. இதனாலே இவர் வெளியேறுவதற்கு காரணம் என்று கூறி வருகிறார்கள்.

ரக்ஷிதா குறித்து சொன்னது:

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ராபர்ட் மாஸ்டர் முதன்முதலாக வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்குமே நன்றி. ரக்ஷிதாவுக்கும் எனக்கும் நடுவில் இருப்பது நட்பு மட்டுமே. வெளியில் இருந்து பார்க்கும்போது வேறு மாதிரி தோன்றிருக்கலாம். ஆனால், அது வெறும் நட்பு மட்டுமே. அவள் தனிமையில் இருந்த போது நான் சென்று பேச ஆரம்பித்தேன். அப்படியே நட்பை வளர்த்துக் கொண்டோம் என்று கூறியிருந்தார்.

Advertisement