‘உங்களின் மருமகளாக பெருமையடைய செய்வேன்’ போஸ் பிறந்தாளில் நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ ஷங்கரின் மகள்.

0
125404
bose
- Advertisement -

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியை கண்டுள்ளது. நயன்தாரா விவேக் யோகிபாபு டேனியல் பாலாஜி கதிர் இந்துஜா என்று பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் ஒரு சில புதுமுக நடிகைகளின் அறிமுகமாகிஇருந்தார்கள் அந்த வகையில் காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் ஒருவர்.

-விளம்பரம்-

இந்த படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்திரஜா. மேலும், எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல வில்லன் நடிகர் தீனாவுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பதிவிட்டு தீனா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

- Advertisement -

உங்களை முதல் முதலில் பார்த்பொழுது கூப்பிட்ட வார்த்தைதான் இந்த நொடிவரைக்கும் கூப்பிடுகிறேன் “அப்பா”. தாய் மாமன் என்ற உறவு தாயுக்கும் மேலானவர். என் சந்தோஷத்தை எனக்கு திருப்பி தந்த என்னவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.  உங்கள் கரங்களை நான் எப்போதும் விடமாட்டேன் ஏனென்றால் நீங்கள் என்னுடைய அப்பா. லவ் யூத் அப்பா என்று மிகவும் உருக்கமாக தனது அன்பை வெளியிட்டிருந்தார் இந்திரஜா.

இந்த நிலையில் இந்திரஜ பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகருமான போஸ் வெங்கட் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு அவரையும் உறவு முறை வைத்து குறிப்பிட்டுள்ளார்.மேலும்,அந்த பதிவில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் போஸ் மாமா,என்னுடைய நலன் விரும்பி என்னுடைய பெரியப்பா எனக்கு எல்லாமே நீங்கள் தான் மாமா. நான் எப்போதும் உங்களை மறக்க மாட்டேன் உங்களின் மருமகளாக என்றும் நான் உங்களை பெருமை அடையச் செய்வேன் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் இந்த ராஜா.

-விளம்பரம்-
Advertisement