தமிழ் சினிமா உலகில் முடி சூடா மன்னாக வலம் வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த திரைப்படம் பிகில். இந்த படம் உலக அளவில் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். இவர்களை தவிர விவேக், யோகி பாபு , ஆனந்த்ராஜ், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க பெண்களின் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரோபோ சங்கரின் மகள் இந்த்ரஜா நடித்து உள்ளார்.
இந்த அணியில் தனது தந்தையைப் போல மிகவும் நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் ரோபோ ஷங்கரின் மகள். ரோபோ சங்கரை தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா? சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றுள்ளனர். அந்த வகையில் டிவி நிகழ்ச்சியில் கலைஞராக இருந்த ரோபோ ஷங்கர் தற்போது சினிமா உலகில் பட்டைய கிளப்பி கொண்டு வருகிறார். விஜய் டிவி மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தின் வாயிலாக இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோபோ ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து உள்ளார்.
இதையும் பாருங்க : கர்ப்பமாக இருக்கும் வேலையில் நடு காட்டில் ஆபத்தில் சிக்கிய ஆல்யா. காப்பாற்றிய மீட்புக்ழு. வீடியோ இதோ.
இவர் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் முத்த மகள் தான் இந்திரஜா. சமீபத்தில் வெளியான பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணி வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் ரோபோ ஷங்கருக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இந்தரஜா. பிகில் திரைப்படத்திற்குப் பின்னர் தனது மகளுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாக ரோபோ சங்கர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்.
இந்நிலையில் நடிகை இந்திரஜாவுக்கு இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு என்ற பிரிவில் விருது கிடைத்து உள்ளது. இந்த விருதை இயக்குனர் அமீர் அவர்கள் கையில் வாங்கி உள்ளார். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த விருது குறித்து இந்திரஜா கூறியது. எனக்கு இந்த விருது கிடைத்ததில் மிகவும் சந்தோசமாக உள்ளது. அதுவும் அமீர் சார் கையில் வாங்கியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறிஉள்ளார். தற்போது இவர் பதிவிட்ட கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்திரஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.