முதன் முறையாக படு மார்டன் உடையில் ரோபோ ஷங்கர் மகள் நடத்திய போட்டோ ஷூட்.

0
85805
indraja

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்றது. படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியை கண்டுள்ளது. நயன்தாரா விவேக் யோகிபாபு டேனியல் பாலாஜி கதிர் இந்துஜா என்று பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் ஒரு சில புதுமுக நடிகைகளின் அறிமுகமாகி இருந்தார்கள் அந்த வகையில் காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் ஒருவர்.

https://www.instagram.com/p/B8wFsIyBOCy/

இந்த படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்திரஜா. இந்த படத்திற்கு பின்னர் ரோபோ ஷங்கருக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இந்தரஜா. பிகில் திரைப்படத்திற்குப் பின்னர் தனது மகளுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாக ரோபோ சங்கர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். சமீபத்தில் கூட நடிகை இந்திரஜாவுக்கு கடந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு என்ற பிரிவில் விருது கிடைத்து இருந்தது . இந்த விருதை இயக்குனர் அமீர் அவர்கள் கையில் வாங்கி இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : எங்க அம்மா மாதிரியே தூங்கரா. அழகாக தூங்கும் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நிஷா

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த விருது குறித்து இந்திரஜா கூறியது, எனக்கு இந்த விருது கிடைத்ததில் மிகவும் சந்தோசமாக உள்ளது. அதுவும் அமீர் சார் கையில் வாங்கியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறி இருந்தார். மேலும், எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். சமீபத்தில் இந்திரா மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

-விளம்பரம்-

அந்த புகைப்படத்தில் இந்த்ரஜா ஹாலிவுட் படத்தில் வரும் நடிகையை போல இருக்கிறார் என்று ரசிகர் ஒருவர் கமன்ட் செய்துள்ளார். மேலும், இந்த போட்டோ ஷூட்டை நடத்த காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் இந்திரஜா. இந்த புகைப்படத்தை ரசிகார்கள் பலரும் லைக் செய்து வருவதோடு இந்திரஜாவிற்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

Advertisement