காதலர் தினத்தன்று உருக்கமான பதிவை பதிவிட்ட ரோபோ சங்கரின் மகள்.

0
3142
indraja
- Advertisement -

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியை கண்டுள்ளது. நயன்தாரா விவேக் யோகிபாபு டேனியல் பாலாஜி கதிர் இந்துஜா என்று பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் ஒரு சில புதுமுக நடிகைகளின் அறிமுகமாகிஇருந்தார்கள் அந்த வகையில் காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் ஒருவர்.

-விளம்பரம்-

இந்த படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்திரஜா. இந்த படத்திற்கு பின்னர் ரோபோ ஷங்கருக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இந்தரஜா. பிகில் திரைப்படத்திற்குப் பின்னர் தனது மகளுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாக ரோபோ சங்கர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். சமீபத்தில் நடிகை இந்திரஜாவுக்கு கடந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு என்ற பிரிவில் விருது கிடைத்து உள்ளது. இந்த விருதை இயக்குனர் அமீர் அவர்கள் கையில் வாங்கி உள்ளார்.

- Advertisement -

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த விருது குறித்து இந்திரஜா கூறியது. எனக்கு இந்த விருது கிடைத்ததில் மிகவும் சந்தோசமாக உள்ளது. அதுவும் அமீர் சார் கையில் வாங்கியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறி இருந்தார். மேலும், எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு இந்திரஜா பதிவை ஒன்றை போட்டுள்ளார்.

அதில், என்னுடைய இன்ஸ்டாகிராம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் இந்த நாள் காதலர்களுக்கோ ஜோடிகளுக்கு மட்டும் உரிய நாள் கிடையாது. நாம் யாரிடம் இருந்து அதிகப்படியான அன்பையும் அக்கறையையும் கோபத்தையும் பெறுகிறோமோ அவர்களுக்கும் உரிய நாள் தான். இது உங்கள் பெற்றோர், சகோதர சகோதரிகள் நம்மிடம் அன்பை காட்ட மறந்தாலும் நாம் தொடர்ந்து அன்பை கொடுத்துக்கொண்டே இருப்போம் என்று பதிவிட்டுள்ளார் இந்திரா.

-விளம்பரம்-

Advertisement