உயிரிழந்த ராணுவ வீரர்கள்.! உருக்கமான வீடியோ வெளியிட்டு நிதியுதவி செய்த ரோபோ ஷங்கர்.!

0
492
Pulwama
- Advertisement -

கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று மாலை  ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத இயக்கத்தினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு நிரப்பிய காரை சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதித் தாக்குதல் நடத்தினர். இதில் 40கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  

-விளம்பரம்-

இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தை அடுத்து பல்வேறு அரசியல் பிரபலங்களும், நடிகர்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், உயிரிழந்த குடும்பத்திற்கு இழப்புத் தொகையும் அரசு அறிவித்துள்ளது.

- Advertisement -

அதே போல பல்வேறு பிரபலங்களும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதி யுதவியை அறிவித்துள்ளனர். உயிர் இழந்த தியாகிகளுக்கு நன்றியுணர்வுடன், அவர்களது குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான பொறுப்பை ரிலையன்ஸ் ஃபண்டேஷன் ஏற்றுள்ளது.

அதே போல பல்வேறு தமிழ் நடிகர்கள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அளிப்பதாக தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ரோபோ ஷங்கர்.

-விளம்பரம்-
Advertisement