நடிகைக்காக ரோபோ ஷங்கர் செய்த செயல் – பல்ப் கொடுத்து அமர வைத்த Reporters – தேவயா இது.

0
410
robo
- Advertisement -

மேடையில் ரோபோ சங்கர் செய்த செயல் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று இருக்கிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர், நடிகைகள் தற்போது சினிமாவில் கலக்கி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர்.

-விளம்பரம்-

குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர். சின்னத்திரையில் தொடங்கிய இவரது பயணம் வெள்ளித்திரையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

- Advertisement -

ரோபோ சங்கர் சின்னத்திரைப்பயணம்:

முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர். அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். விஜய் டிவி மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. பின் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா திரைக்கு அறிமுகமானார்.

ரோபோ சங்கர் திரைப்பயணம்:

ஆரம்பத்தில் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரோபோ ஷங்கர். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

-விளம்பரம்-

அர்த்தம் படத்தின் டீசர் விழா:

அதில் ஒரு மகள் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் வெளிவந்த விருமன் படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது ரோபோ சங்கர் அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கு பெற்று இருக்கிறார். இந்நிலையில் மேடையில் ரோபோ சங்கர் செய்த செயல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இன்று அர்த்தம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ரோபோ சங்கர் கலந்து கொண்டு இருந்தார்.

பல்பு வாங்கிய ரோபோ சங்கர்:

அப்போது மேடையில் நடிகை ஷ்ரத்தா தாஸ் ஆங்கிலத்தில் பேசினார். அவருக்கு தமிழ் பேசத் தெரியவில்லை. இதனால் ரோபோ சங்கர் அதை தமிழில் ட்ரான்ஸ்லட் செய்து கூறுகிறேன் என்று தமிழில் மொழிமாற்றம் செய்து கொண்டு இருந்தார். அதனால் டென்ஷனான பத்திரிகையாளர்கள் எல்லோரும் எங்களுக்கு இங்கிலீஷ் தெரியும். நீங்க உட்காருங்க என்று அவரை அனுப்பி விட்டார்கள். இப்படி பத்திரிகையாளர்களிடம் ரோபோ சங்கர் பல்பு வாங்கியிருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement