இரண்டு முறை உடைந்த ஸ்டேஜ், ரிசப்ஷனுக்கு மட்டும் ஆன செலவு – ரோபோ ஷங்கர் மகள் திருமண அலப்பறைகள்

0
489
- Advertisement -

ரோபோ சங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்டேஜ் இரண்டு முறை உடைந்து விழுந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சாலும் தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார். அதன் பின் தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

பின் இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதனிடையே 2002 ஆம் நடித்து நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் இந்திரஜா. இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம்.

- Advertisement -

ரோபோ ஷங்கர் மகள்:

முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். அதற்குப் பின் இவர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்த சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். ஆனால், இவரால் இறுதிவரை தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு இவர் தன்னுடைய முறை மாமனை திருமணம் செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்.

திருமண நிச்சயதார்த்த நிகழ்வு:

இவர் திருமணம் செய்யும் நபர் கார்த்திக். இவர் மதுரையில் தொடர்வோம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது இவர் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ரோபோ சங்கரின் உறவினர் ஆவார். சமீபத்தில் தான் இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது. இதில் ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு நெருக்கமான உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள். இதை அடுத்து சில வாரத்திற்கு முன்பே இவர்களுடைய திருமண கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டது. பின் கடந்த வாரம் இந்திரஜா- கார்த்திக் திருமணம் மதுரையில் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இந்திரஜா திருமணம்:

சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலருமே இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்கள். மதுரையில் தனது மகளுக்கும் மருமகனுக்கும் தடபுடலாக கரி விருந்து வைத்து அசத்தியுள்ளார் ரோபோ ஷங்கர். பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பிரமாண்டமாக கமலஹாசன் தலைமையில் இந்திரஜா ரிசப்ஷன் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கமலஹாசன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூரி, அதிதி சங்கர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

ஸ்டேஜ் குறித்து சொன்னது:

நினைத்ததை விட பிரபலங்களின் கூட்டம் அதிகமாக தான் இருந்தது. சுமார் 3000 பேர் வருவார்கள் என்று தான் நினைத்தார்கள். ஆனால், ஒன்பதாயிரம் பேருக்கு மேல் அதிகமாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். இந்த நிலையில் ஸ்டேஜ் உடைந்தது குறித்து மாப்பிளை கார்த்தி சொன்னது, கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் வந்த காரணமாக ஸ்டேஜில் அதிகமாக வெயிட் இருந்தது. இதனால் இரண்டு முறை ஸ்டேஜ் முடிஞ்தது. அதற்குப் பிறகு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் இரண்டு முறையுமே உடனடியாக சரி செய்து கொடுத்தார்கள். எனக்கு மயக்கமே வந்துவிட்டது என்று கூறி இருந்தார்.

Advertisement