அந்த மாத்தர சாப்டா இருமல் வருதுன்னு சொன்னாங்க, நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க – ரமணியம்மாள் இறப்பு குறித்து அவரின் மகன்.

0
234
ramaniyammal
- Advertisement -

ராக் ஸ்டார் ரமணியம்மாள் இறந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேதாரை பெற்ற நிகழ்ச்சி தான் சரிகமப என்ற மியூசிக் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல நபர்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத பலர் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்கிறார்கள். அந்த வகையில் சரிகமப என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் ரமணி அம்மாள். இவர் வீடு வீடாக பாத்திரம் தேய்க்கும் வேலையை செய்து வந்தார். அப்போது இவர் பாட்டு பாடி கொண்டே தான் வேலை செய்வார். இவருடைய பாடலை கேட்ட அந்த வீட்டின் உரிமையாளர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சி குறித்து தகவல் அளித்தார்.

- Advertisement -

ரமணியம்மாள் குறித்த தகவல்:

அதன் பின் தான் ரமணியம்மாள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தை பெற்றார். திறமைக்கு வயது எப்போதும் தடை இல்லை என்று ரமணியம்மாள் சாதித்து காட்டினார். இவருடைய வெள்ளந்தி பேச்சும், அப்பாவி தனத்தின் மூலமும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது என்று சொல்லலாம். இதனால் இவரை ராக் ஸ்டார் ரமணியம்மாள் என்று தான் பலரும் அழைத்தார்கள்.

திரையில் ரமணியம்மாள் பாடிய பாடல்:

மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்தது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான பொம்மை நாயகி என்ற திரைப்படத்தில் ரமணியம்மாள் பாடி இருந்தார். இந்த நிலையில் பாடகி ரமணியம்மாள் இறந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று காலை ரமணியம்மாள் தூக்கத்திலேயே இறந்து விட்டார். இவருடைய மறைவிற்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் இவருடைய இறப்பு குறித்து ரமணியம்மாளின் மகன் கூறியிருப்பது, என்னுடைய அம்மாவிற்கு மூன்று மாதமாகவே உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது.

-விளம்பரம்-

ரமணியம்மாள் உடல் பிரச்சனை:

அவருக்கு கிட்னியிலும், இதயத்திலும் பிரச்சனை இருந்தது. இதனால் நாங்கள் ஹெல்த் சென்டருக்கு போய் பரிசோதனை செய்தோம். டாக்டர் சொன்ன டெஸ்ட் எல்லாம் செய்து முடித்துவிட்டு அவர்கள் கொடுத்த மாத்திரை சாப்பிட்டால் குணமாகிவிடுவார்கள் என்று சொன்னார்கள். ஆனால், அந்த மாத்திரை போடுவதனால் இருமல் வருகிறது என்று அம்மா அந்த மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மாவிற்கு ரொம்ப முடியாமல் போய்விட்டது. இதனால் நாங்கள் ஓமந்தூரார் இடத்திற்கு கொண்டு போய் காண்பித்தோம். அங்கு பரிசோதனை செய்துவிட்டு அம்மா உடம்புக்கு ஒன்னும் இல்லை என்று சொன்னார்கள்.

ரமணியம்மாள் இறப்பு குறித்து சொன்னது:

அது மட்டும் இல்லாமல் தனியார் மருத்துவமனைக்கும் கூட்டிட்டு போனோம். அவர்களும் ஒன்னும் இல்லை என்று சொன்னதால் நாங்கள் வீட்டுக்கு வந்து விட்டோம். இறப்புக்கு முன் நாள் கூட எங்களிடம் அம்மா நன்றாக தான் பேசிக் கொண்டிருந்தார். பின் நேற்று காலையில் அம்மா தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிர் போய்விட்டது. திடீரென்று இப்படி அம்மா எங்களை விட்டு போவார்கள் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை என்று கண்கலங்கியவாறு கூறியிருக்கிறார். மேலும், ரமணி அம்மாவுடைய இறுதி சடங்கு நேற்று மாலை 6 மணிக்கு அவருடைய இல்லத்தில் நடைபெற்றது. இவருடைய திடீர் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்திருக்கிறது.

Advertisement