தோனி இல்லாதது குறித்து பேசிய ரோஹித் சர்மா..!தோனிக்கு பதில் யார்…!

0
803
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆட்டதிறனில் சறுக்கலை கண்ட தோணி சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி சென்னை அணிக்கு கோப்பையும் வென்று தந்து தனது பழைய பார்மை நிரூபித்தார்.

-விளம்பரம்-

Dhoni

- Advertisement -

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட உள்ளது. ஆனால், இந்த தொடரில் இந்திய அணியில் தோனி இடம்பெறாதது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தோனி இல்லாதா அணி எப்படி வெல்லும் என்று பலரும் விமர்சித்து வந்தனர்.

அதே போல வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் யாராவது விக்கெட் கீப்பராக நியமிக்கபடுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-

Rohitsharma

இந்நிலையில் தோனி, அணியில் இல்லாதது குறித்து இந்திய அணியின் தற்போதைய கேப்டனான ரோஹித் சர்மா கூறியுள்ளதாவது, தோனி எங்களுக்கு மிகப்பெரிய வீரராக திகழ்ந்து வருகிறார்.இந்தத் தொடரில் இருக்காது ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் தங்களுடைய திறமையை நிரூபிக்க இது நல்ல தருணமாக இருக்கும். அவர்கள் இருவரும் தங்களது வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement