எங்க சீரியலுக்கு போட்டியே அந்த சேனலில் ஓடும் இந்த சீரியல் தான் – ரோஜா சீரியல் நடிகை பேட்டி.

0
1755
roja
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான்.

அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், TRP அளவை எகிற வைக்கிறது. அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜோ சீரியல், அந்த தொலைக்காட்சியின் வெற்றிகரமான சீரியலாக திகழ்ந்து வருகிறது. . சன் தொலைக்காட்சியில் எத்தனையோ தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இப்போது டிரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கும் சீரியலில் ரோஜா சீரியல் தான் பட்டையை கிளப்புகிறது.

- Advertisement -

இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா நல்காரி, தெலுங்கு திரையுலகில் 2010-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘அந்தாரி பந்துவையா’இப்படத்தில் மிக முக்கிய ரோலில் நடிகை பிரியங்கா நல்காரி நடித்திருந்தார்.இது தான் நடிகை பிரியங்கா நல்காரி அறிமுகமான முதல் திரைப்படம். அதன் பின்னர் ‘நா சாமி ரங்கா’, ராமின் ‘ ஹைப்பர்’, ராணா டகுபதியின் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார்.

பிக் பாஸுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் செம்பருத்தி ... பார்வதி படுஜோர் |  Sembaruthi Serial gives tough competition to Big Boss - Tamil Filmibeat

ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது ரோஜா சீரியல் தான். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியங்காவிடம், ரோஜா சீரியலுக்கு தற்போது எந்த சீரியல் போட்டியாக டப் கொடுக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரியங்கா, செம்பருத்தி சீரியல் தான் என்று கூறியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பபட்ட இந்த சீரியல் அந்த தொலைக்காட்சியின் டாப் சீரியலில் ஒன்றாக இருந்து வருகிறது.

-விளம்பரம்-
Advertisement