பொது மக்களால் திடீரென தாக்கப்பட்ட ரோஜா சீரியல் நாயகன் அர்ஜுன் ? வெளியான புகைப்படம். உண்மை என்ன ?

0
525
roja
- Advertisement -

பொதுமக்களால் ரோஜா சீரியல் நடிகர் அர்ஜுன் தாக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் இருந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரை தொடர்கள் பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக கொரோனா லாக் டவுனில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சீரியலை விரும்பி பார்த்து வருகிறார்கள். மேலும், தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என்று பல சேனல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

-விளம்பரம்-

அதில் எப்போதும் சன் டிவி முதலிடத்தை பிடித்து விடும் என்பதில் அய்யமில்லை. டிஆர்பி ரேட்டிங்கிலும் சன் டிவி முதல் இடம் பிடிக்கும். வானத்தை போல, கண்ணானே கண்ணே, அன்பே வா, பூவே உனக்காக இப்படி பல தொடர்களை சன் டிவி வழங்கி வருகிறது. அந்த வகையில் சில வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போடும் தொடர்களில் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று. இந்த சீரியல் டிஆர்பியிலும், மக்கள் மனதிலும் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது.

- Advertisement -

ரோஜா சீரியல் பற்றிய தகவல்:

அதுமட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இந்த சீரியல் தான் TRPயில் டாப் இடத்தை பிடித்து இருக்கிறது என்றும் சொல்லலாம். மேலும், ரோஜா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த தொடர் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல். இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. ரோஜா சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யனும், ஹீரோயினாக பிரியங்கா நல்காரியும் நடிக்கிறார்கள். ஆரம்பத்தில் தொடரில் வில்லியாக ஷாமிலி நடித்து இருந்தார்.

சீரியலை விட்டு விலகிய நடிகர்கள்:

இவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகினார். பின் இவருக்கு பதில் தற்போது அணு என்ற வில்லி என்ற கதாபாத்திரத்தில் அக்சயா நடிக்கிறார். இவர் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த தொடரில் அஸ்வின் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெங்கட் விலகி இருந்தார். இவருக்கு பதில் வேறு ஒரு நடிகர் நடித்து வருகிறார். இருந்தாலும் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, சில மாதங்களுக்கு முன் பெல்லாம் டிஆர்பி யில் முதலிடத்தை அதிகம் பிடித்துக் கொண்டிருந்தது ரோஜா தொடர்.

-விளம்பரம்-

ரோஜா சீரியலின் டிஆர்பி :

இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், இப்போது இந்த ரோஜா தொடர் டிஆர்பி யில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் கதையின் சில விஷயங்களை மாற்றம் செய்து இழுவையாக எடுத்துச் செல்வது தான் என்று மக்கள் கூறுகிறார்கள். அது மட்டுமில்லாமல் இடையில் இந்த சீரியலின் கதை ஆசிரியர் மாற்றம் செய்யப் பட்டிருக்கிறார்கள். கடந்த வாரம் விவரப்படி ரோஜா சீரியல் மூன்றாவது இடத்திற்கு சன் தொலைக்காட்சியின் டிஆர்பியில் உள்ளது. தற்போது ரோஜா தொடரில் நீதிமன்ற காட்சிகள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ரோஜா சீரியலில் அடுத்து நடக்கப்போவது:

இந்த நிலையில் தற்போது தொடரில் அடுத்த நடக்கப்போகும் விஷயம் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால், அர்ஜுனை பொதுமக்கள் காவல் நிலையத்தின் முன் கடுமையாகத் தாக்கினார்கள். அவரை காப்பாற்ற ரோஜா, சாண்டி, சந்திரகாந்தா ஆகியோர் முயற்சி செய்கிறார்கள். இந்த காட்சி தான் சீரியலில் அடுத்து வரப் போகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து அனைவரும் எதற்காக? என்ன ஆச்சு? என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இதன் மூலம் ரோஜா சீரியல் வழக்கம்போல் டிஆர்பியில் முன்னிலையில் வகிக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement