உன் பொண்ணால எங்க பரம்பர மானமே போச்சுனு தொந்தகாரங்க அம்மாவை திட்டுனாங்க – ரோஜா சீரியல் வில்லி.

0
522
- Advertisement -

சீரியல் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மக்களின் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்த சீரியல். இந்த சீரியலும் இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களும் இந்த சீரியலுக்காக பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கின்றனர். குறிப்பாக சன் குடும்ப விருதுகளில் சீரியலில் கொடுக்கப்படும் முதன்மை விருதுகளில் அதிகபட்சமான விருதுகள் ஆனைத்தையும் ரோஜா சீரியல் தான் வாங்கி இருந்தது. இந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அந்த சிரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த பலரது பாராட்டுகளை பெற்ற காவ்யா சமீபித்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்வில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை அதில் பகிர்ந்து கொண்டார்

-விளம்பரம்-

காவ்யா பேட்டியில் கூறியது :

அவர் கூறுகையில் சிறுவயதில் என்னுடைய உறவினர்கள் திருமணத்தில் ஆட சொன்னார்கள் அப்படி என் ஆட்டத்தை பார்த்த அவர்கள் என்னை தொடர்ந்து ஆடச்சொன்னார்கள். பின்னர் நான் சில கல்யாண நிகழ்ச்சிகளிலும் கோவில் திருவிழாக்கள் ஆடினேன் பின்னர் நான் 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது பெரிய பெண்ணாகி எப்படி ஆடுவது என்று வீட்டில் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். மேலும் ஸ்ருதி கற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

- Advertisement -

பின்னர் என்னுடைய கேள்வி ஞானத்தினால் முயற்சிகள் செய்து பாட்டு பட ஆரம்பித்தேன். நான் பாடினால் நான் தப்பா பாடுவேன் என்று கூட எனக்கு தெரியாது அப்படிப்பட்ட நிலையில் என்னுடைய கேள்வி ஞானத்தால் பல பாடல்களைக் கேட்டு பாட ஆரம்பித்தேன். இந்த இடத்திற்கு நான் சுலபமாக வந்து விடவில்லை அதிக கஷ்டங்களை தங்கிதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.

ரசித்த நடிகரோடு நடித்தேன் :

என்னுடைய விருப்பமான சீரியல் “சித்தி” தான்.பள்ளி படிக்கும் போது இந்த சீரியலை தொறந்து பார்ப்பேன். ஆனால் அதற்கு பிறகு அந்த சிரியாவில் நான் பார்த்து சிரித்த தேவோடு “ரோஜா” சீரியலில் நடித்தேன். அப்போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. நான் கச்சேரியில் பாடுவதற்கு செல்லும் போது பல பிரபலங்கள் வருவார்கள. கூட்டம் முழுவதும் அவர்களை சூழ்ந்து கொள்ளும். அப்போது நான் மேடையில் பாட்டுபாடுவதினால் தான் அவர்களை பார்க்க முடியவில்லை என்று நினைதேன்.

-விளம்பரம்-

ஆனால் இப்போது நான் நிகழ்ச்சிக்கு சென்றால் என்னை பார்ப்பதற்கு பல வருகின்றனர். இதை பார்க்கும் போது வாழ்க்கை எப்படி மாறிவிட்டது என்று சந்தோசமாக இருக்கிறது என்று கூறினார்.

உன்னால் என்னுடைய மானமே போய் விட்டது :

மேலும் பேசிய காவ்யா கூறுகையில் “நான் தொடக்க காலத்தில் பாடுவதற்கு செல்லும் போது எங்களுடைய வீட்டிற்கு சொந்தங்கள் வருவதை தவிர்ப்பார்கள். வயதுக்கு வந்த பெண்ணை மேடையில் ஆட வைக்கலாமா என்று என்னுடைய அம்மாவிடம் கேட்பார்கள். எவ்வளவு பண கஷ்ட்டம் வந்தாலும் இப்படியா ரோட்டுல ஆட வைக்கறது. உன்னுடைய பெண்ணால் எங்களுடைய பரம்பரை மானமே போய்விட்டது என்றெல்லாம் என்னுடைய அம்மாவிடம் கூறியிருக்கின்றனர்.

காலம் மாறிவிட்டது :

ஆனால் என்னுடைய அம்மா மிகவும் தைரியமான ஒரு பெண். அவர்களை பார்த்துதான் நான் வளர்ந்தேன். எனக்கு அவர்கள் பல சூழ்நிலைகளில் பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. வெறுத்த சொந்தங்கள் இப்போது எங்களை கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து விட்டோம் என்று மகிழ்ச்சியாக கூறினார். மேலும் தன்னுடைய திருமணம் வாழ்கை பற்றியும் சிலவற்றை அந்த பேட்டியில் பகிந்து கொண்டார் காவ்யா.

Advertisement