திருமணத்தில் எங்கள் பெற்றோர்கள் இதனால் தான் வரவில்லை ? – திருமணத்திற்கு பின்னர் வீடியோ வெளியிட்ட ரோஜா சீரியல் நடிகை.

0
707
- Advertisement -

எளிமையாக திருமணம் முடித்த காரணம் குறித்து ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரோஜா சீரியலில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிய இந்து சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது இதனை தொடர்ந்து பிரியங்கா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரில் நாயகியாக நடித்த வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “எல்லாத்துக்கும் சாரி, எப்படா வருவ? நான் உனக்காக காத்துட்டு இருக்கேன்டா”, என்று செம ஃபீலிங் காதலனை நினைத்துஒரு உருக்கமான பதிவை போட்டிருந்தார்.

-விளம்பரம்-

இதுகுறித்து இணையங்களில் பலவிதமான கருத்துகள் எழுந்தன. இந்த நிலையில் நடிகை பிரியங்காவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நிச்சயதார்தம் கூட முடிந்தது. பிரியங்கா, தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலை கடந்த சில காலமாக காதலித்து வந்தார். மேலும், இவர்களின் திருமண நிட்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் இவர்கள் திருமணம் நின்றுபோனதாக தகவல்கள் வெளியானது .

- Advertisement -

இதுகுறித்து பேசி இருந்த பிரியங்கா, எங்களுக்கு கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது ஆனால், ஒரு சில காரணங்களால் கல்யாண தேதி தள்ளிக்கொண்டே போனது மேலும், எங்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடு தீர்க்க முடியாத அளவிற்கு பெரிதாகி விட்டது.ஹைதராபாத்திலிருந்து மலேசியா சென்ற ராகுல், என்னை இதுவரை தொடர்பு கொள்ளவே இல்லை. கடைசி முயற்சியாக மிகவும் கஷ்டப்பட்டு அவரை போனில் தொடர்பு கொண்டேன்.

ஆனால், எந்த பயனும் இல்லை. இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இனிமேல் எங்களுக்குள் எதுவும் கிடையாது. நிச்சயதார்த்தம் கூட முடிஞ்சிருச்சு இனிமேல் அவரவர் வாழ்க்கையை பார்த்து செல்ல வேண்டியதுதான். ஆல் தி பெஸ்ட் ராகுல்’ என்று கூறி இருந்தார் பிரியங்கா. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி போன்றவை பேசிய பிரியங்கா தெலுங்கு சினிமாவிலும், சில டிவி தொடர்களிலும் முன்பு நடித்திருந்தார் ராகுல்.

-விளம்பரம்-

அவரை பிரியங்கா காதலித்து வந்தார். இருவரும் ஒரே துறையில் பிஸியாக இருந்ததால் ராகுல் இந்தத் துறை வேண்டாம் என முடிவெடுத்துவிட்டு மலேசியாவில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டார். மேலும், ப்ரியங்காவிடம் திருமணம் எப்போது என்று கேட்கப்பட்டது. இதற்கு விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவருக்கும் ராகுலுக்கு விநாயகர் கோவிலில் படு சிம்பிளாக திருமணம் நடைபெற்று இருந்தது.

இப்படி ஒரு நிலையில் எளிமையாக காரணம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் பிரியங்கா ‘பாஸ்போர்ட் விசா பிரச்சனையால் பெற்றோர்கள் வர முடியவில்லை மலேசியா முருகன் கோவிலில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம் இது ஏற்கனவே திட்டமிட்ட ஒரு திருமணம் தானே தவிர ரகசிய திருமணம் கிடையாது. நல்லபடியாக முடிந்தது என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் சம்மதித்தால் விரைவில் ஒரு பெரிய பங்க்ஷன் ஒன்றை வைப்பேன் உங்களின் அனைத்து ஆசீர்வாதங்களும் எனக்கு தேவை’ என்று கூறியுள்ளார்.

Advertisement