கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து மக்கள் அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். அந்த வகையில் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவு பெற்றிருக்கிறது. அதில் ஒன்று தான் ரோஜா சீரியல். இந்த சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த சீரியலில் நாயகனாக சிபு நடிக்கிறார். நாயகியாக பிரியங்கா நல்காரி நடித்து வருகின்றனர்.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. மேலும், இந்த சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தவர் ஷாமிலி. இவர் இடையில் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகினார். பின் இவருக்கு பதில் தற்போது வேறு ஒரு நடிகை அனு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஷாமிலி ஏற்கனவே வாணி ராணி, பாசமலர், பொன்னூஞ்சல், வள்ளி, மாப்பிள்ளை போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ஜீவா’ படத்தில் கூட நடித்து இருக்கிறார்.
ஷாமிலி நடித்த சீரியல்:
இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது. ஆனால், இவர் ரோஜா சீரியலில் நடித்து கொண்டு இருக்கும் போது தான் கர்ப்பமாக இருந்தார். இதுகுறித்து தனது யூடுயூப் பக்கத்தில் சொல்லி இருந்தார். பிரசவ நேரம் நெருங்கும் வேலையில் இவர் சீரியலில் இருந்து விலகினார். இருந்தும் இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தனியாக இவர் யூடியூப்பில் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். அதில் இவர் சீரியலில் இருந்து விலகியதும் அடிக்கடி வீடியோக்களை யூடியூப்பில் பதிவிட்டு வந்தார்.
வைரலாகும் ஷாமிலி யூடியூப் சேனல்:
அதோடு இவர் வளைகாப்பு புகைப்படங்கள், மெட்டர்னிட்டி சூட் புகைப்படங்கள் என்று எல்லாமே சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். அதுமட்டுமில்லாமல் ஷாமிலிக்கு பெண் குழந்தை பிறந்தது. மேலும், இவர் தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். தற்போது ஷாமிலி குழந்தையுடன் தன்னுடைய நேரத்தை செலவழித்து வருகிறார். மற்ற நேரங்களில் இவர் யூடியூபில் ரொம்ப பிசியாக இருக்கிறார். அடிக்கடி பிராங்க் வீடியோ செய்து வெளியிடுவது இவருடைய வழக்கம். அதிலும் பிரியாணி சேலஞ்ச் வைப்பது, ஊர் சுற்றும் வீடியோ என்று ஏதாவது ஒரு வீடியோவை யூ டியூப்பில் வெளியிட்டு வருவார்.
முடியை வெட்டி பாப்கட் செய்த ஷாமிலி:
இதனால் இவருக்கு லட்சங்களுக்கு மேல் வியூவர்ஸ் இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது ஷாமிலி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சிவராத்திரி அன்று ஷாமிலி தனது மாமியாரை பிராங்க் செய்யும் வீடியோ தான். அதில் ஷாமிலி தன் முடியை வெட்டி விட்டது போல் பாப்கட் செய்த டோப்பாவை மாற்றிக்கொண்டு மாமியாருக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார். அவரின் மாமியார், ஏன் இப்படி செய்தாய்? என்று காரணத்தை கேட்டு ஷாமிலி இடம் சண்டை போடுகிறார். ஷாமிலியும் மாமியாருடன் சண்டை போடுவது போல் நடிக்கிறார்.
மாமியாருக்கு அதிர்ச்சி கொடுத்த ஷாமிலி:
உடனே மாமியார் தன்னுடைய மகனுக்கு போன் செய்து நடந்ததை எல்லாம் சொல்லி விடுகிறார். கோயிலுக்கு எப்படி போவது என்று கோபித்து கொண்டு ரூமுக்கு ஷாமிலியின் மாமியார் சென்று விடுகிறார். கடைசியில் ஷாம்லி டோபாவை கழட்டிவிட்டு புடவையை கழட்டி அழகாக தயாராகிக் கொண்டு தன் மாமியார் முன்னாடி வந்து இருக்கிறார். மாமியார் அதை பார்த்த சந்தோஷத்தில் ஷாம்லிக்கு முத்தம் கொடுக்கிறார். இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.