அப்போ விஜய் பாடலுக்கு வரும் லைக்ஸ் எல்லாம் Bots தானா – விஜய் ரசிகர் ரோஜா மகன் செய்துள்ள பித்தலாட்ட வேலை.

0
534
beast
- Advertisement -

தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொங்கியவுடன் ரோஜா படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகில் பிரபுதேவாவிற்கு இணையாக நடனம் ஆடக் கூடிய ஒரே நடிகையும் இவர் தான். அவர் ஆடும் வேகத்திற்கு எப்படிப்பட்ட கஷ்டமானதாக ஸ்டெப்பாக இருந்தாலும் அசால்டாக ஆடக்கூடியவர் ரோஜா. பின் சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் ரோஜா அரசியல் பக்கம் சென்று விட்டார்.

-விளம்பரம்-

தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதிலும் தற்போது இவர் ஆந்திர அரசியலில் முழுநேரமாக களமிறங்கியிருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பெருபான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவறும், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ நடிகை ரோஜா. அதனால் ரோஜாவுக்கு, ஜெகன்மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

நகரி தொகுதி எம்.எல்.ஏ.வ ரோஜா:

ஆனால், சாதி வாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ரோஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தற்போது ரோஜா நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக மட்டும் இருக்கிறார். இந்த மக்களுக்காக பல விஷயங்களை ரோஜா செய்து வருகிறார். இதனிடையே நடிகை ரோஜா, இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ரோஜா தன்னுடைய குடும்பத்துடன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் ரோஜா மகனின் கிருஷ்ணா பேசியது, நான் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். 100க்கும் மேற்பட்ட யூடியூப் அக்கௌன்ட்களை திறந்திருக்கிறேன்.

விஜய் குறித்து ரோஜா மகன் சொன்னது:

அதில் எல்லாவற்றிலும் விஜய்யின் டிரெய்லர், பாடல்கள் என அனைத்திற்கும் லைக்ஸ், சப்ஸ்கிரைப், கமெண்ட் செய்வேன் என்று கூறுகிறார். இதை கேட்ட தளபதி ரசிகர்கள் ரோஜாவின் மகன் இவ்வளவு பெரிய விஜய் ரசிகரா! என்று ஆச்சரியத்தில் வியந்து கமெண்ட் போட்டு வருகின்றனர். இதனை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் ஹேட்டர்ஸ்கள் பலர் இது கண்டிப்பாக Bots களை வைத்து செய்த ஒரு விஷயம் தான் என்றும் கூறிக்கொண்டு வருகின்றனர். பிரபல நடிகையான ரோஜாவின் மகனே விஜய் பாடலுக்கு லைக் போட போலி கணக்குகளை ஆரம்பித்து லைக் போட்ட விஷயத்தை கேட்டு ஹேட்டர்ஸ்கள் மீண்டும் விஜய்யை கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

விஜய்யின் பீஸ்ட் படம்:

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். அதிலும் குறிப்பாக சாதாரண மக்கள் தொடங்கி பிரபலமான நபர்கள் என பலரும் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளார்கள். பொதுவாக விஜய் படத்தின் டீஸர், ட்ரைலர், பாடல் என்று எது வெளியாகினாலும் சில மணி நேரத்திலேயே யூடுயூபில் பல சாதனைகளை செய்து விடும். அந்த வகையில் தற்போது விஜய்யின் பீஸ்ட் படம் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

உலகளாவிய டாப் 200ல் இடம் பெற்ற அரபிக்குத்து:

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. மேலும், அரபிக் குத்து பாடல் யூடுயூபில் 70 மில்லியன் பார்வையகர்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த பாடம் வெளியான 48 மணிநேரத்தில் உலகளாவிய டாப் 200 பாடல்களின் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்தியப் பாடல் என்கிற பெருமையை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement