அறிவு புகைப்படத்தை அட்டை படத்தில் வெளியிட்ட ரோலிங் ஸ்டோன் இதழ் – அப்போதும் கழுவி ஊற்றும் ரசிகர்கள். ஏன் தெரியுமா ?

0
1865
arivu
- Advertisement -

ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டைப்படத்தில் பாடலாசிரியர் அறிவு படம் இடம்பெறாததற்கு பல்வேரு தரப்பில் இருந்து கண்டன குரல் எழுந்த நிலையில் தற்போது அறிவு புகைப்படத்தை அட்டை படத்தில் வெளியிட்டுள்ளது அந்த வார இதழ். தமிழ் சினிமாவில் தற்போதும் மிகவும் பிரபலமான ராப் பாடகராக திகழ்ந்து வருபவர் அறிவு. தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகளை ரேப் இசை பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர்.

-விளம்பரம்-

அதிலும் இவர் எழுதிய ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் இந்திய அளவில் பிரபலமடைந்தது. மேலும், இந்த பாடல் இந்திய அளவில் எந்த அளவிற்கு ஹிட் அடைந்தது என்பது நாம் அனைவரும் அறிவோம்.இப்படி ஒரு நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் இந்திய பதிப்பின் அட்டை படத்தில்  ‘எஞ்சாய் எஞ்சாமி’ மற்றும் ’நீயே ஒளி’ பாடல்களின் சர்வதேச சாதனைகளை பாராட்டும் வகையில் பாடகி தீ மற்றும் பாடகர் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றது.

இதையும் பாருங்க : ஈழப் பெண் சர்ச்சையில் இருந்து வெளிவந்த தன் மருமகன் குறித்து மனம் திறந்த ஆர்யாவின் மாமியார்.

- Advertisement -

ஆனால், இரண்டு பாடல்களின் பாடலாசிரியரும், ’எஞ்சாய் எஞ்சாமி’ பாடலின் பாடகர்களில் ஒருவருமான ’தெருக்குரல்’ அறிவின் படம், அதில் இடம் பெறவில்லை. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து பதிவிட்ட ரஞ்சித், தெருக்குரல்’அறிவு படம் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டை படத்தில் இடம்பெறாததற்கான காரணம் புரியவில்லை.

அறிவு மீண்டும் ஒருமுறை மறைக்கடிக்கப்பட்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டி இருந்தார். மேலும், அட்டை படத்தில் இடம்பெற்ற பாடகர் ஷான் வின்செண்ட் வெளியிட்ட அறிக்கையில் உங்கள் கடின உழைப்பை நான் என்றும் அவமதிக்கவோ எடுக்கவோ மாட்டேன். இதுகுறித்து, முழு விவாதத்தையும் தொடரவே விரும்புகிறேன். உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும் விரும்புகிறேன் அறிவு” என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டைப்படத்தில் பாடலாசிரியர் அறிவு படம் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அறிவின் புகைப்படம் அடங்கிய கவர் புகைப்படம் ஒன்றை ரோலிங் ஸ்டோன் இதழ் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த புகைப்படம் ‘டிஜிட்டல் ‘ கவர் மட்டும் தான் என்றும் சமூக வலைதளத்தில் எழுந்த சர்ச்சையை தீர்க்க தான் இப்படி வெளியிட்டுள்ளனர் என்றும் நெட்டிசன்கள் குறை கூறி ரோலிங் ஸ்டோன் இதழை மீண்டும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement