‘மேகா-வுக்காகவாது Csk ஜெயிச்சிருக்கலாம்’ – ட்விட்டரில் டிரெண்டாகும் மேகா ஆகாஷின் Reaction வீடியோ.

0
866
MeghaAkash
- Advertisement -

நேற்று நடைபெற்ற Ipl போட்டியில் csk தோல்வி அடைந்ததால் மேகா ஆகாஷ் கொடுத்த Reaction ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நேற்று எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனிக்கு 200வது போட்டியாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை அணி இந்த வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் முதற்கொண்டு சென்னை அணியும் விரும்பியது.

-விளம்பரம்-

ஆனால், முதல் இன்னிங்சில் சென்னை நினைப்பது போல நடக்க வில்லை. ஏனெற்றால் ராஜஸ்தான் அணி பதறுவதற்கு பதிலாக சென்னை அணி பதறியது. குறிப்பாக மெயின் அலி பல விக்கெட்டுகளை எடுக்கும் வாய்ப்பை தவற விட்டார். அதே போல பந்துச்சாளர்களும் சரியாக போடவில்லை. கடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் பல விக்கெட்டுகளை எடுக்க உதவி செய்த ரவீந்திர ஜடேஜா அதிக ரன்களை வாரி கொடுத்தார்.

- Advertisement -

ஆனாலும் சில 2 விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார் ஜடேஜா. இந்நிலையில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து. 176 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்தார். அதன் தொடர்ச்சியாகவே 8ரன்களில் சந்தீப் சர்மாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த விக்கெட்டுக்கு பின் களமிறங்கிய ரஹானே சிறப்பாக ஆடி 19 பந்துகளிலே 31 ரன்களை அடித்த நிலையில் அஷ்வின்னிடம் ஆட்டமிழந்தார்.

டுபே மற்றும் மொயின் அலி சொற்ப ரன்களிலே அவுட் வெளியேறினார்.அதன் பின் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ராயுடு 1 ரன்னை மட்டுமே எடுத்து சஹலிடம் விக்கெட்டை இழந்தார். இது சென்னை அணிக்கு மேலும் மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் இரண்டு பந்துகள் எக்ஸ்ட்ரா ரன் வர தோனி இரண்டு சிக்ஸர்களை அடித்தார்.

-விளம்பரம்-

ஆனாலும் கடைசி 1 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய சென்னை அணி தோற்றத்திற்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது ஷிவம் துபேயை மிகவும் முன்னதாகவே அனுப்பியதுதான். ஏனென்றால் அவர் விக்கெட்டுக்கு பிறகுதான் கேம் மொத்தமாக மாறியது.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியை காண உதயநிதி ஸ்டாலின், காமெடி நடிகர் சதீஷ், திரிஷா, நடிகர் ஜெயராம் என்று பல்வேறு திரைப்படங்கள் வந்திருந்தார்கள். அந்த வகையில் சிம்பு தனுஷ் போன்றவருடன் நடித்த மேகா ஆகாஷ் வந்திருந்தார். இப்படி ஒரு நிலையில் சென்னை அணி தோல்வி அடைந்ததால் சோகமடைந்த மேக ஆகாஷ் சோகமடைந்தார். அந்த வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement