யார் சூப்பர் ஸ்டார்? ரஜினியா..? விஜய்யா..? கடுப்பான S.A. சந்திரசேகர்

0
544
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே விஜய் சூப்பர் ஸ்டாரா? இல்லை ரஜினி சூப்பர் ஸ்டாரா? என்கின்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. இந்த சூப்பர் ஸ்டார் பிரச்னைக்கு வாரிசு படத்தில் நடித்த சரத்குமார் முதற்கொண்டு பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் விஜய்யை அறிமுகப்படுத்தியவரும் விஜய்யின் தந்தையுமான S.A சந்திர சேகர் இந்த விஷயம் பற்றி தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர் எஸ்.ஏ சந்திரசேகர். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தொடக்க காலங்களில் தன்னுடைய அப்பாவான எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் தான் பெரும்பாலான திரைப்படங்களை நடித்திருந்தார். நடிகர் விஜய் 1984ஆம் ஆண்டு “வெற்றி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாலாலும் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் அதற்க்கு முன்னரே “சட்டம் ஒரு இருட்டறை” என்ற திரைப்படத்தை மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிவிட்டார்.

- Advertisement -

இயக்கிய படங்கள் :

பின்னர் “நாளைய தீர்ப்பு” என்ற திரைப்படத்தின் மூலம் அவரது மகன் விஜய்யை கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு பின்பு அவர் மகனை விஜய் அவர்களை வைத்தே தொடர்ந்து செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன் என பல திரைப்படங்களை இயக்கி வந்தார். 1945ஆன் ஆண்டு பிறந்த எஸ்.எ.சி தன்னுடைய 77வயதிலும் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராக நய்யப்புடை, ட்ராபிக் ராமசாமி, ஆருத்ரா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் சர்ச்சை :

ஏற்கனவே வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் விஜய் தான், ரஜினிகாந்த் அப்போதய சூப்பர் ஸ்டார் என்று கூறியது பெரு சர்ச்சைக்குள்ளாகி அதனையடுத்து வாரிசு இசை வெளியிட்டு விழாவில் சரத்குமார் விஜய் தான் சூப்பர் ஸ்டார் எனக் கூறியது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இப்படி பட்ட நிலயில் தான் விஜய்யின் தந்தை S.A. சந்திரசேகர் தன்னுடைய கருத்தை “நான் கடவுள் இல்லை” என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது கூறியுள்ளார்.

-விளம்பரம்-

விஜய் சூப்பர் ஸ்டாரா ? :

அந்த சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் படத்தின் ட்ரைலரில் விஜய்யை காட்டிவிட்டு ஸ்டார்ஸ் ஏன் காட்டப்படுகிறது என்று கேட்டார். அதற்கு பதிலளித்த SAC நான் விஜய்யை மட்டும் காட்டவில்லை நான் அறிமுகப்படுத்தியவர்கள் அனைவரையும் காட்டிவிட்டு எனக்கு பதிலாக என்னுடைய மகனை வைத்துக்கொண்டேன் என்று கூறினார். மேலும் ரஜினி காட்டப்பட்டது குறித்து கேட்கப்பட்டபோது ஆவேசப்பட்ட SAC இந்த படத்தை பற்றி பேசுவதாக இருந்தால் மட்டும் பேசுங்கள் தேவையில்லாத விஷியத்தை பேச வேண்டாம் எனக் கூறினார்.

இதற்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை :

மேலும் இதற்கு பிறகு ரஜினி பேசும் ஒரு வசனம் இந்த ட்ரைலரில் வந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த SAC இந்த விஷியத்திற்கும் இந்த படத்திற்கு சம்மந்தம் இல்லை, நான் பல ஸ்டார்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நான் ஒரு ஸ்டார் மேக்கர் எனவே என்னுடைய ஸ்டார் நடிகர்களை ட்ரைலரில் போட்டிருக்கிறன். இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. எனவே தான் பேனரில் ரஜினிகாந்தின் படத்தை வைத்திருக்கிறேன்.

முடிச்சு போடாதிர்கள் :

ஏனெற்றால் நான் ரஜினியை வைத்து “நான் சிகப்பு மனிதன்” படத்தை எடுத்தேன். அதில் ரஜினி பேசிய வசனத்தை நான் ட்ரைலரில் போட்டிருக்கிறேன். எனவே இதற்கும் அதற்கும் ஏன் முடிச்சு போடுறீங்க என்று கூறினார். மேலும் பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளித்த SAC நான் சிகப்பு மனிதன் படத்தின் கதைக்கும், இந்த படத்தின் கதைக்கும் சம்மந்தம் இருக்கிறது. நான் அதனை ஓப்புக்கொள்கிறேன் என்று கூறினார்.

Advertisement