இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அதிர்ச்சியில் ரசிகர்கள். யார் சொன்னது???

0
1940
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனரான, தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய “கேப்மாரி”படம் குறித்து ரசிகர்களும், பிரபலங்களும் தாறு மாறாக பல விமர்சனங்களை இணையங்களில் எழுப்பி வருகின்றனர். இதனால் எஸ். ஏ. சந்திரசேகரை கைது செய்தால் கூட தப்பில்லை என்று கூட ஒரு சில பேர் கூறி வருகிறார்கள். தற்போது இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன் முகங்களை கொண்டவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கிய 70 வது திரைப் படம் “கேப்மாரி”. இந்த படத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா, சித்தார்த் விபின் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை கிரீன் சிக்னல் அவர்கள் தயாரித்து உள்ளார். அதோடு இது நடிகர் ஜெய்யின் 25வது படம் ஆகும். இந்த படம் இன்றைய இளைஞர்கள் செய்யும் அட்டூழியங்களையும், போடும் ஆட்டங்களையும் வெட்ட வெளிச்சமாக சுட்டிக்காட்டி, அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவான கதை ஆகும். இந்த படத்தின் பெயரையே பலர் விமர்சித்து வந்த நிலையில் இந்த படத்தைப் பற்றி திரையரங்க உரிமையாளர் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் அவர்கள் கடுமையாக விமர்சித்து உள்ளார். அதில் அவர் கூறியது, ‘கேப்மாரி’ என்ற படத்தின் பெயருக்கு ஏற்றவாறு படமும் உள்ளது.

- Advertisement -

நாட்டில் பெருகி வரும் பாலியல் குற்றங்களுக்கு உதவும் வகையில் இந்த படம் உள்ளது. இந்த கால கட்டத்தில் பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களும், கொடுமைகளும் பெருகிக் கொண்டே வருகிறது. அப்படி இருக்கும் போது எந்த நம்பிக்கையில் நீங்கள் இந்த மாதிரியான மகா கேவலமான, மோசமான, மட்டமான படத்தை எடுக்கிறீர்கள் என எனக்கு புரியவில்லை. இந்த படத்தை எடுத்ததற்காகவே இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தால் கூட தப்பில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என அவர் கூறி உள்ளார்.

சினிமா உலகில் மூத்த கலைஞர் ஆக இருக்கும் நீங்கள் இந்த மாதிரியான படம் எடுப்பதா?? இதனை தொடர்ந்து கேப்மாரி படம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களையும், கிண்டலும், கேலியும் செய்து வருகிறார்கள். சமீபத்தில் தான் ஆந்திராவில் பிரியங்கா என்ற இளம் வயது பெண் மருத்துவரை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைகளை செய்து அநியாயமாக எரித்து கொண்டார்கள். அதோடு இந்த மாதிரியான படங்கள் மூலம் தான் நாட்டில் பெண்களுக்கு அநீதிகள் நடக்கிறது. தற்போது இருக்கும் காலங்களில் பெண்களுக்கு நடக்கும் அநீதிக்கு இந்த படமே தூண்டுதலாக உள்ளது என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement