புஸ்ஸி ஆனந்த் இப்படி நாடகம் ஆடி தான் விஜயை ஏமாத்திட்டு இருக்காரு – வைரலாகும் SACயின் வீடியோ

0
362
- Advertisement -

புஸ்ஸி ஆனந்தை விமர்சித்து எஸ் ஏ சந்திரசேகர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதை அடுத்து தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.

-விளம்பரம்-

இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. மேலும், விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்ப விஜய் அரசியலில் களமிறங்குவதை உறுதி செய்து விட்டார்.
விஜய் தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்து தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்து இருக்கிறார்.

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் :

இது ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. பின் அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும், விஜய் அவர்கள் கட்சியின் கொடி, சின்னம் ஆகியவற்றை தேர்வு செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விஜய் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதுக்காக சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கட்சி புது செயலி:

இந்த கட்சி பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளை புஸ்ஸி ஆனந்த் அடிக்கடி தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார். இந்த செயலி தொடங்கி மூன்று நாட்களிலேயே 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து இருக்கிறார்கள். மேலும், 2 கோடி தொண்டர்களை சேர்க்க வேண்டும் என்பதே இதன் இலக்கு என்று கூறப்படுகிறது. தற்போது அதற்கான வேலையில் தான் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனரும் விஜய்யின் தந்தையும் ஆன எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் புஸ்ஸி ஆனந்த் குறித்து விமர்சித்து பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

எஸ் ஏ சந்திரசேகர் வீடியோ:

அதில், புஸ்ஸி ஆனந்த் ஒரு குழு வைத்திருக்கிறார். அதற்கு இரண்டு பேர் அட்மின். அந்த குழுவில் விஜயும் இருக்கிறார். ஒரு அரசியல்வாதி கூட இதை செய்ய மாட்டார். ஒரு முறை மன்றத்தில் ஒரு பென்ச்சில் புஸ்ஸி படுத்துக்கொண்டு ஒருவரை போட்டோ எடுக்க வைத்து பல whatsapp குரூப்களில் பதிவிடுகிறார். அந்த போட்டோவை 50 பேரை வைத்து ஷேர் செய்கிறார்கள். 100 பேரை வைத்து லைக் செய்ய வைக்கிறார்கள். இது ஒரு நாடகம் உண்மையாக ஆகப்படுகிறது.

புஸ்ஸி ஆனந்த் குறித்து சொன்னது:

நமக்காக உழைத்த மனிதர்கள் கீழே படுப்பதை பார்த்து விஜய் தன்னுடைய தங்கும் தரையை பயன்படுத்த சொல்கிறார். ஆனால், விஜய் இடம் புஸ்ஸி ஆனந்த் இருக்கும்போது அவருடைய எதிர்காலம் என்ன ஆகும் என்பதை நினைத்தால் ஒரு தந்தையாக எனக்கு கவலையாக இருக்கிறது என்றெல்லாம் பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோவை தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள். இது யார் பார்த்த வேலை என்று தெரியவில்லை. கட்சி ஆரம்பிக்கும்போதே இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement