அஜித் மீது எனக்கு மரியாதை உண்டு.! தவறான செய்தியை பரப்ப வேண்டாம்.! எஸ் ஜே சூர்யா.!

0
891
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும், இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்பது நாம் பலரும் அறிந்த ஒரு விடயம் தான்.

-விளம்பரம்-
Image result for ajith boney kapoor

இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் 60 வது படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தையும் இயக்குனர் வினோத் தான் இயக்க இருக்கிறார் என்று ஏற்கனவே அதிகார பூர்வ தகவல் வெளியானது. இந்த நிலையில் தல 60 குறித்து சுவாரசிய தகவல் ஒன்றை சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் போனி கபூர்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர், தமிழ் படம் நேர்கொண்ட பார்வை ஷூட்டிங்கின் போது அஜித் பற்றி தெரிந்துக் கொண்டேன். அவருக்கு ரேஸிங் மற்றும் விளையாட்டுகளில் உள்ள ஆர்வம் பற்றி தெரிந்து ஆச்சர்யத்தில் வியந்தேன்.  எதிர்பாராத விதமாக த்ரில்லர் படமான தல 60 படத்தில் ஸ்பீடுக்காக அவரது ரேஸிங் ஆர்வத்தை பயன்படுத்துகிறோம். அவரை ஒரு பக்கா ஆக்ஷன் படத்தில் நடிக்க வைக்க ஆசை என்று கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தில் எஸ்.ஜே சூர்யாதான் வில்லன் என்று மற்றுமொரு செய்தி பரவி வந்தது. இதற்கு எஸ்.ஜே. சூர்யாவே மறுப்பு தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், “தல 60 படத்தில் நான் நடிப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மை இல்லை. அஜித் மீதும், போனி கபூர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

-விளம்பரம்-

எஸ் ஜே சூர்யா விஜய் நடித்த மெர்சல் படத்திலும் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். முன்னதாக, ரஜினியின் ’தர்பார்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. பின்னர் விஜய்யின் ’தளபதி 64’ படத்தில் அவர் வில்லனாக ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட படக்குழுக்கள் அந்தத் தகவலை மறுத்தன.

Advertisement