எஸ்.ஜே.சூர்யா காரை பார்த்து வாயடைத்து போய் பிரியங்கா மோகன் நின்று இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நானி. இவர் தமிழில் நான் ஈ மற்றும் ஆஹா கல்யாணம் போன்ற சில படங்களில் தான் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இருந்தாலும், இவர் அதிகம் தெலுங்கு மொழி படங்களில் தான் நடித்து இருக்கிறார்.
மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது இவர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை டிவிவி தனய்யா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் நானி உடன் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, அதிதி பாலன், சாய்குமார், சுபலேகா சுதாகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ட்ரைலர் விழா:
இந்த படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரைலர் விழா சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அப்போது விழா முடிந்து நடிகை பிரியங்கா மோகன் அவர்கள் நானியின் காரில் ஏறி சென்றிருக்கிறார். அந்த சமயம் பார்த்து எஸ் ஜே சூர்யாவின் கார் வந்திருக்கிறது. அவர் பிஎம்டபுள்யூ காரில் வந்து இருக்கிறார். அந்த காரை பார்த்து பிரியங்கா, எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய பிஎம்டபிள்யூ காரில் வந்திருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா கார் :
இந்த காருடைய விலை 1 கோடி வரை இருக்கும். இந்த காரை பார்த்த உடனே பிரியங்கா, நானியின் காரில் இருந்து இறங்கி வந்து, வாவ்! சூப்பர் கூலாக இருக்கிறது. நானும் வரவா என்று எஸ் ஜே சூர்யாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு எஸ் ஜே சூர்யாவும் சிரித்துக் கொண்டே தலையாட்டி இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் எஸ் ஜே சூர்யாவின் காரை பார்த்து பலருமே பாராட்டி வருகிறார்கள்.
எஸ்.ஜே.சூர்யா திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். ஆரம்பத்தில் இவர் துணை இயக்குனராக தான் பணியாற்றினார். அப்படியே இவர் படங்களில் ஒரு சில காட்சியில் நடித்தும் இருக்கிறார். பின் இவர் இயக்கிய வாலி படம் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.
எஸ். ஜே.சூர்யா குறித்த தகவல்:
தனது முதல் படத்திலேயே எஸ் ஜே சூர்யா மாபெரும் ஹிட்டை அளித்தார். அதன் பின் விஜய்யின் குஷி படத்தையும் எஸ் ஜே சூர்யா தான் இயக்கி இருந்தார். இப்படி தமிழ் சினிமாவின் இரு முன்னணி நடிகர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக எஸ் ஜே சூர்யாவின் படம் அமைந்திருந்தது. அதற்கு பிறகு இவர் பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ்.ஜே. சூர்யா அவர்கள் இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தார். அதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.