குஷி படத்தின் கதையை விஜய்யிடம் சொல்லிவிட்டு எஸ் ஜே சூர்யா பார்த்த வேலை. வெளியான ரகசியம்.

0
32740
s-j-surya
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து பின்னர் ஹீரோவான பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரான எஸ் ஜே சூர்யாவும் ஒருவர். எஸ் ஜே தமிழில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார். அதிலும் இவர் இயக்கிய குஷி மற்றும் வாலி திரைப்படங்கள் வேற லெவலில் வெற்றிபெற்றது. தற்போது இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி படம் குறித்து சமூக வலைத்தளங்களில் சில சுவாரசியமான தகவல் ஒன்று வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் குஷி படத்தில் எஸ்.ஜே.சூர்யா இவ்வளவு வேலைகளை செய்தாரா!!! என்று ரசிகர்கள் வியப்பில் உள்ளார்கள். மேலும், 2000 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் “குஷி”. இந்த படத்தை ஏ. எம். ரத்னம் அவர்கள் தயாரித்து உள்ளார். மேலும், இந்த படத்திற்கு இசையமைத்தவர் தேவா. இந்த படத்தில் விஜய்,ஜோதிகா,விஜயகுமார்,நிழல்கள் ரவி, மும்தாஜ்,விவேக், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடல்களும் வேற லெவல்ல ஹிட்டுக் கொடுத்தது. அதிலும் ‘கட்டிபுடி கட்டிபுடிடா’ பாடல் தற்போது உள்ள இளைஞர்கள் மனதை கூட விட்டு நீங்கவில்லை.

-விளம்பரம்-
Image result for kushi Shooting Spot"

மேலும், இந்த படம் விஜய் அவர்களின் திரை உலகில் ஒரு மைல்கல் படமாக அமைந்தது. மேலும், இந்த படம் இளம் ரசிகர்களை தான் அதிகம் கவர்ந்தது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு காதல், ரொமாண்டிக், நகைச்சுவை என கமர்சியல் படமாக இருந்தது. இப்படி இந்த படத்தை பற்றி எவ்வளவோ விஷயங்களை சொல்லலாம் அந்த அளவுக்கு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மேலும், இந்த படத்தின் போது எஸ்.ஜே.சூர்யா அவர்கள் செய்த வேலையை இப்போது செய்து இருந்தால் சமூக வலைத்தளங்களில் வேற மாதிரி இருக்கும் என்றும் கூறுகிறார்கள். அது என்னவென்றால், குஷி படத்தின் கதையை விஜய்யிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டார் எஸ்.ஜே. சூர்யா. பின் அவர் பத்திரிக்கைகளை சந்திக்கும் ஏற்பாடு ஒன்றை ஏற்பாடு செய்தார்.

இதையும் பாருங்க : காதலியின் பிறந்தநாளன்று காதலை உறுதி செய்த முகென். என்ன செய்துள்ளார் பாருங்க.

- Advertisement -

மேலும், அதில் அவர் குஷி படத்தின் கதையை டாப் to பாட்டம் வரை அழகாக அவர்களிடம் கூறி விட்டார். மேலும், இந்த படத்தை எழுதி,நானே இயக்கி உள்ளேன் என்று அறிவித்திருந்தார். மேலும், இந்தத் திரைக் கதைக்கு சமமாக யாராலும் கொடுக்க முடியாது என்று ஓப்பன் சேலஞ்ச் அளித்து இருந்தார். ஆனால், என்ன ஒரு நல்ல விஷயம் என்று பார்த்தால் அப்போது எந்த ஒரு சமூக வலைத்தளங்களும் இல்லை. இப்போது இருக்கும் ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைத்தளங்களில் இருந்திருந்தால் இந்தப் படம் இந்த அளவிற்கு வெற்றி பெற்று இருக்குமா?? என்பது கேள்விக்குறி தான். மேலும், இவர் இப்படி ஒரு சேலஞ்சை இப்போ விட்டிருந்தால் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை நாயகனாக மாறி இருப்பார்.

மேலும், இதனை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே.சூர்யா அவர்கள் மீண்டும் இயக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், அதற்கான கதையையும் எழுதி வைத்து விட்டாராம். தளபதி விஜய் ஓகே சொன்னால் படம் ரெடி என்றும் கூறியுள்ளார். ஆனால், விஜய் அவர்கள் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது “தளபதி 64” படப்பிடிப்பில் விஜய் அவர்கள் பிஸியாக உள்ளார். அதுமட்டுமில்லாமல் “தளபதி 65” படத்திற்கான வேலைகளும் தொடங்கி விட்டது என்றும் தகவல் வெளி வந்து உள்ளது.

-விளம்பரம்-
Advertisement