பற்றி எரியும் விஜய்யின் விவாகரத்து சர்ச்சை – மருமகள் குறித்து விஜய்யின் தந்தை அளித்த பேட்டி.

0
1190
sac
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன் முகங்களை கொண்ட இவர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி இருக்கிறார். மேலும் இவர் நடிகர் விஜய் தந்தையும் ஆவார்.

-விளம்பரம்-

தளபதி விஜய்யை அறிமுகம் செய்தி வைத்தவரே இவர் தான். இந்நிலையில் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து செய்துவிட்டார்கள் என்ற செய்தி வைரலாகி வருவதை தொடர்ந்த தற்போது ஏஸ்.ஏ,சந்திரசேகர் அவரது மகன் விஜய்யை பற்றியும் அவரது மனைவி சங்கீதா பற்றியும் சமீபத்தில் செய்தி ஊடகத்திற்க்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறுகையில் விஜய் வருடத்திற்கு ஒருமுறை ரசிகர்களுக்கு மேடையில் ஏரி குட்டி கதை சொல்லும் போது தனக்கு வியப்பாக இருந்ததாகவும், வாழ்க்கையில் அடிபட்ட ஒருவரால்தான் இப்படியெல்லாம் பேச முடியும் என்று கூறினார்.

- Advertisement -

நான் விஜய்யை அடித்திருக்கிறேன் :

மேலும் கூறுகையில் விஜய்க்கு பொறுப்பு கூடிக்கொண்டே செல்கிறது என்று குறி தனக்கும் விஜய்க்கும் இடையே உள்ள பிரச்சனை பற்றி கூறினார். பொதுவாக மகன்கள் எப்போதும் அம்மா பிள்ளையாகத்தான் இருப்பார்கள். ஆனால் விஜய் அதற்கு நேருக்குமாறானவர். சிறுவயதில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் நானே அவரை அடித்து பின்னர் நானே சமாதானப் படுத்தியிருக்கிறேன். அப்படிதான் அவரை பார்த்து பார்த்து வளர்த்தேன். இன்று கூட நான் அவரை அப்படிதான் பார்க்கிறேன்.

பிரிவுக்கு காரணம் இதுவாக இருந்திருக்கலாம் :

தற்போது உள்ள பிரிவுக்கு ஒருவேளை இந்த விஷயம் காரணமாக இருக்கலாம்,ஆனால் என்னுடைய பிள்ளை மீது எனக்கு இருக்கும் பாசத்தினால்தானம் இது போன்ற கருத்து வேறுபாடு நடந்திருக்கலாம். வாழ்க்கையில் எனக்கு முதலில் சினிமா, பின்னர் விஜய், பின்னர்தான் என் மனைவி ஷோபா. விஜய் முதல் நாளில் நடிக்கும்போது அந்த நாள் என்னுடைய மனைவியிடம் சென்று உன்னுடைய மகன் பெரிய நடிகராக வருவார் என்று கூறினேன். அதுபோலவே பெரிய நடிகராக மாறிவிட்டார்.

-விளம்பரம்-

விஜய் நினைத்த படியே பெரிய நடிகராகிவிட்டார் :

தற்போது அனைவரும் விஜய்யை தளபதி என்று கூறுகிறீர்கள். நாங்கள் கூட அவரை அன்னார்ந்துதான் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது. அவர் நடித்த இரண்டாவது படத்தில் ராதாரவி ஸ்ரீதேவியுடன் நடித்திருந்தார். அப்போது ஒரே ஷாட்டில் நடித்து கொடுத்தார். அப்போது ராதாரவி கூட உங்களுடைய மகன் பெரிய ஆளாக வருவார் என்றார்கள். என்னுடைய மகன் வளர்வதற்கு நானும் உழைத்தேன். அவருக்கு உந்துதலாக இருந்து தற்போது நீங்கள் அனைவரும நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் என்று கூறினார்.

மருமகளை பற்றி பேசிய சந்திரசேகர் :

மேலும் விஜய்யுடைய மனைவி சங்கீதா பற்றி பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில் “சங்கீதா பிள்ளைகளை மிகவும் கண்டிப்பாக வளர்த்து வருகிறார். அவர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது வீட்டுப்பாடம் சொல்லி கொடுப்பது என பிள்ளைகளுக்கு தேவயானதை பார்த்து பார்த்து செய்கிறார். அவர் பிள்ளைகளை மிகவும் கண்டிப்பாக வளர்க்கிறார். எங்களை பார்க்க வரும்போது கூட பணம் கொடுத்தால் அதனை அம்மா சொன்ன பிறகுதான் வாங்கிக்கொள்ளும்படி மிகவும் ஒழுக்கமாக வளர்த்திருக்கிறார் என தன்னுடைய மருமகள் சங்கீதா பற்றியும் பெருமையாக பேசினார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

Advertisement