அன்று ஜெயலலிதாவிடம் இருந்து தங்க சங்கலியை பெற்ற இசைக்குழு – ஆனால், இன்று ?

0
2288
isai

சினிமா பாடல்களை மையமாக வைத்து தான் பல மேடை இசை நிகழ்ச்சிகளை பார்த்திருப்போம். படத்தில் ஒலி, ஒளி வடிவில் கேட்டு ரசித்ததை இசைக்கலைஞர்கள் மூலம் பாடுவதை நேரில் கண்டு ரசித்து அனுபவங்கள் வேற லெவல். மெல்லிசை குழுவினரின் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். தொலைக்காட்சிகள் முக்கியத்துவம் அதிகரித்த பின் மக்களை இசைமழையில் நனைய வைத்த இந்த மெல்லிசை குழுக்களின் வரவேற்பு குறைய தொடங்கியது. இருந்தாலும் இவர்கள் திருமண நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகள் என தங்களுடைய இசை கச்சேரிகளை நடத்தி வந்தார்கள்.

பி.சுசீலா - உஷா உதூப்

25 ஆயிரம் கலைஞர்கள் உட்பட ஒரு லட்சம் பேர் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் நாடே கதி கலங்கிப் போயிருக்கும் நிலையில் இந்த மூன்று, நான்கு மாதங்களாக தொழிலின்றி வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்து இசைக்கலைஞர்கள் தவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான இசைக் குழுக்கள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இசைக்குழு தான் சாதகப்பறவைகள். இந்த இசைக் குழுவின் உரிமையாளர் சங்கர் ராம். இவர் கொரோனா காலத்தில் தங்களுடைய இசைக்குழுவின் நிலையைக் குறித்து ஆதங்கத்துடன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, எங்களுடைய இசை குழு எல்லா வகைப் பாடல்களையும் பாடும். ஆண்டுதோறும் தை மாதத்தை நாங்கள் ஆவலுடன் எதிர் பார்ப்போம். அப்போது தான் பண்டிகை, கோயில் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் என்று தொடங்கி விடும். அதனால் எங்களுக்கு மாதத்தில் ஏழு கச்சேரிகள் ஆவது இருக்கும். சில மாதங்கள் அதைவிட அதிகமாக இருக்கும். நாங்கள் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் வாசித்துளோம். மறைந்த ஜெயலலிதா அம்மா முதலமைச்சராக இருந்தபோது அவங்க கலந்துகிட்ட ஒரு நிகழ்ச்சியில நாங்க இசைக் கச்சேரி செய்தோம்.

இசை நிகழ்ச்சியில் கமல்ஹாசன்

ரசிச்சுக் கேட்டவங்க, கடைசியில மேடையேறி தன்னோட தங்கச் சங்கிலியை ஒரு பாடகிக்கு அணிவித்து பெருமைப்படுத்தினாங்க. ஆனால், லாக்டோன் அறிவித்த இந்த மூன்று மாதங்களுக்கு ஒரு கச்சேரி கூட இல்லாமல் நாங்கள் சும்மா தான் இருக்கிறோம்.திருமண நிகழ்ச்சிகளில் இசை கச்சேரி செய்ய அரசு அனுமதிப்பார்களா? மக்கள் விரும்புவார்களா? எங்களுக்கு வேலை வாய்ப்பு இருக்குமா? என்று பல கேள்விகளுடன் எங்கள் குழுக்கள் கவலையில் இருக்கிறோம்.

-விளம்பரம்-
இசைக்கலைஞர்கள்

இந்த நிலைமை எப்போது மாறும் என்று தெரியவில்லை. நாங்கள் மட்டுமல்ல தமிழகத்திலுள்ள மற்ற இசைக்கலைஞர்களின் நிலையும் இது தான். கொரோனா பிரச்சனை நீங்கும் வரை எங்களால் கச்சேரியை செய்ய முடியாது. அதனால் நாங்கள் தொழில்நுட்ப உதவியுடன் ஆன்லைன் வாயிலாக இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். எங்களுடைய தொழில் அழியாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என ஆதங்கத்துடன் கூறினார்.

Advertisement