சாமி 2 – திரைவிமர்சனம்

0
1179

விக்ரம் – ஹரி கூட்டணியில் 2003 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த சாமி படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது . சாமி படம் விக்ரம் மற்றும் ஹரி அவர்களுடைய கேரியரில் மிகப்பெரிய வெற்றி படமாகும். வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பினை சாமி படம் கொடுத்தது.

saami

- Advertisement -

சாமி 2 படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்: முதல் பாகத்தில் இருந்த ஆறுச்சாமியின் மகனாக ராம் சாமி என்ற பெயரில் விக்ரம் வருகிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஆறுச்சாமியின் மனைவியாக முதல் பாகத்தில் நடித்த த்ரிஷாவிற்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மொத்தத்தில் அப்பா மற்றும் மகன் ஆகிய இரு வேடங்களில் விக்ரம் நடித்துள்ளார். முதல் பாகத்தில் வந்த பெருமாள் பிச்சையின் மகனாக ராவண பிச்சை கேரக்டரில் பாபி சிம்ஹா நடித்துள்ளார்.

கதைக்களம்: ஆறுச்சாமியின் மகனான ராம் சாமி(விக்ரம்) டெல்லியில் IAS படிக்கிறார். பிறகு, அது பிடிக்கவில்லை என்று தனது அப்பாவினை போல போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று IPS படித்து போலீஸ் ஆகிறார். இதற்குள் பெருமாள் பிச்சையின் மகனாக ராவண பிச்சை திருநெல்வேலியினை தனது கண்ட்ரோலுக்கு கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

vikram

டெல்லியில் இருந்து வரும் ராம்சாமிக்கும் , திருநெல்வேலியில் ரவுடியாக இருக்கும் ராவண பிச்சைக்கும் இடையே பகை உண்டாகிறது. இதனை ராம்சாமி எப்படி கையாள்கிறார் என்பதே படத்தின் மீதி கதை. வழக்கம் போலவே ஹரியின் படம் என்பதால் படம் டாப் கியரில் பறக்கிறது.

கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி அவர்களுடைய காமெடி காம்போ செட்டாகவில்லை என்றே சொல்லவேண்டும். படத்தில் வரும் காமெடி காட்சிகள் சற்று சலிப்படைய செய்கிறது. இது தவிர முதல் பாகத்தில் இசை அமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுடைய இசை இல்லாதது இந்த படத்திற்கு ஒரு மைனஸ்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஒரு பாடல் கூட ரசிக்கும் படி இல்லை. படம் முழுவதும் சத்தம் மட்டுமே அதிகமாக தெரிகிறது. இசை எங்கு உள்ளது என்று தெரியவில்லை. சாமியின் பழைய BGM மட்டும் தியேட்டரில் கைதட்டல்களை பெறுகிறது. வில்லன் பாபி சிம்ஹா நடிப்பு அற்புதமாக உள்ளது. அவருடைய கேரியரில் இது ஒரு நல்ல படமாக நிச்சயம் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

Advertisement