த்ரிஷா விலகியதால் சாமி 2-வில் இணைந்த முன்னணி நடிகை .! யார் தெரியுமா.? புகைப்படம் உள்ளே

0
680
Saami-2

தமிழில் 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான “சாமி’ படம் மாபெரும் ஹிட்டானது. நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

Vikram

மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதில் முதல் பாகத்தில் நடித்திருந்த த்ரிஷாவை தவிர மற்ற அனைவரும் இடம்பெற்றிருந்தனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் ,அப்பா மற்றும் மகன் வேடத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விக்ரம் மனைவியாக முதலில் நடிகை த்ரிஷா தான் நடித்து வந்தாராம்.

படப்பிடிப்பு தொடங்கிய ஒரு சில காட்சிகளில் நடிகை த்ரிஷா, தனது கதாபாத்திரம் வலுவில்லாமல் உள்ளது என்றும் சிறிது நேரமே தனது காட்சிகளை படத்தில் வைத்துள்ளனர் என்றும் கூறி இந்த படத்தில் இருந்து விலகியதோடு, இந்த படத்திற்காக பெற்ற முன் பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டாராம். இதனால் தற்போது தந்தை விக்ரமிற்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா நடித்து வருகிறார். படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இந்த படத்தில் நடிப்பதை குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் தெரிவிக்கையில் “திரிஷா மறுத்ததால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் ஏற்கனவேகவுதம் மேனன் வெற்றிமாறன், மணிரத்னம் இயக்கத்தில் நடித்து விட்டேன். தற்போது இயக்கத்தில் விக்ரமுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ” என்று கூறியுள்ளார்.