சாமி 2..நீங்கள் கவனிக்க மறந்த விஷயம்..! இவ்ளோ விஷயம் இருக்கஎப்படி மிஸ் பண்ணீங்க..?புகைப்படம் உள்ளே!

0
1589
Saami-2

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சாமி -2’ படத்தின் ட்ரைலர் இன்று(ஜூன் 3)வெளியானது.இந்த ட்ரைலரில் நீங்கள் கவனிக்க மறந்த விஷயங்களை பற்றி இங்கே காணலாம்.

sami movie

1. இந்த படத்தின் முதல் பாகம் திருநெல்வேலியில் படமாக்கப்பட்டது. தற்போது சாமி 2 வின் படத்தை டெல்லியில் படமாக்கியுள்ளனர்.

இந்த படத்தின் பெரும்பாலான கதை டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ளது. அது இந்த ட்ரைலரில் வரும் தாஜ் மஹால், பாலைவனம், ஒட்டகங்கள் போன்றவற்றிலிருந்து தெளிவாக தெரிகிறது.

camel

3. இந்த படத்தில் நடித்துள்ள பிரபுவை பார்க்கும் போது ஒரு பெரிய அரசியல் வாதியாகவோ,அல்லது தொழிலதிபராகவோ இருப்பார் என்று தெரிகிறது, அது அவர் விமான நிலையத்தில் நடந்து வரும் போது அவருடன் இருக்கும் காவரர்கள் மூலம் தெரிகிறது. மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் பிரபுவின் மகளாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

4. ‘சாமி 1’ படத்திற்கும் இந்த படத்திற்கும் நேரடியான சம்மந்தம் இருக்கிறத்து. எப்படியென்றால் ‘சாமி1’வில்லனாக இருந்த பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரம் வசித்த வீட்டில் தான் இந்த படத்தின் வில்லன் பாபி சிம்ஹாவும் வசித்து வருகிறார். அது ஒரு சண்டைக் காட்சியில் தோன்றும் பெருமாள் பிச்சையின் வாசலில் பொருத்தப்பட்டிருக்கும் புகைப்படத்தில் இருந்து தெரிகிறது.

5. மேலும், இந்த டீசேரின் ஒரு காட்சியில் பெருமாள் பிச்சை பயன்படுத்திய நீல நிற கார் ஒன்றை பொக்கிஷமாக பாதுகாத்து,அதனை ஒரு வேலிக்கு நடுவே நிறுத்தி வைத்துள்ளது, அந்த காட்சியில் பெருமாள் பிட்சை என்று பெயர்ப்பலகை கொண்ட ஒரு பேருந்தும் நின்றுகொண்டிருப்பது இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கலாம்.

6. சாமி 1 ல் த்ரிஷாவிற்கு பெற்றோர்களாக நடித்த டெல்லி கணேஷ் மற்றும் சுமித்ராவும் இந்த டீசரில் தோன்றும் போது, சுமித்சரா கையில் ஆரத்தி தட்டை வைத்துக் கொண்டு எதையோ பார்த்து. அந்த காட்சி வடமாநிலத்தில் தான் நடந்துள்ளது என்று அந்த காட்சிக்கு பின்னால் உள்ள

ஆட்டோவின் மூலம் தெரிகிறது. அந்த காட்சியில் அவர்கள் அணிந்துள்ள அதே ஆடையில் மற்றொரு காட்சியும் தோன்றுகிறது. அதில் சுமித்ரா கையில் ஒரு புகைப்படத்தை வைத்துள்ளார், அப்போது காவல் சீருடையில் இருக்கும் விக்ரம் ஆக்ரோசமாக மேஜையை தட்டுகிறார்.ஒருவேளை அந்த காட்சியில் எதாவது முன்கதையை அவர்கள் கூறியிருக்கலாம்.

7. அதனால் அந்த காட்சிக்கு பின்னர் ராஜஸ்தானில் இருக்கும் விக்ரம் திருநெல்வேலிக்கு சென்று பாபி சிம்ஹாவை பழி வாங்கிகிறாரோ என்று எண்ணம் தட்டுகிறது. சாமி 1 பாகத்தில் வரும் பெருமாள் பிச்சைக்கு ஆகாத நபராக தான் காண்பித்து இருந்தனர். இதனால் பாபி சிம்ஹாவிற்கும் பெருமாள பிச்சைக்கும் என்ன தொடர்பு என்பது படம் வந்த பின்னரே தெரியும்.இல்லை உங்களால் யூகிக்க முடிந்தால் கருத்துக்களை பதிவிடுங்ககள்.

10: இந்த சண்டை காட்சியில் மோடி, மற்றும் அமித்ஷா புகைப்படம் பொருத்தப்பட்ட பேனர் ஒன்று தென்படுகிறது.ஆனால் இதை எதற்காக பயன்படுத்தினார்கள் என்பது கணிக்க முடியவில்லை.

modi