என்ன எல்லாம் விஜய சொல்ற மாதிரியே இருக்கு – SAC நடிக்கும் சீரியலின் வீடியோவை பகிரும் நெட்டிசன்கள்.

0
1501
- Advertisement -

விஜய்யின் தந்தை எஸ் ஏ சி நடித்துள்ள சீரியலில் இடம்பெறும் வசனங்கள் விஜய்யை விமர்சிப்பது போல இருக்கிறது என்று நெட்டிசன்கள் பலரும் அந்த சீரியலின் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். சமீப காலமாகவே விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் பிரச்சனை அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. விஜய் பெயரை பயன்படுத்தி அரசியலில் ஈடுபட்டதால் தந்தை மீது விஜய் கோபத்தில் இருந்தார். இதனால் தாய், தந்தை இருவரிடமும் விஜய் பேசுவதை நிறுத்திவிட்டார் என்று கூறப்பட்டது.

-விளம்பரம்-

அதோடு விஜய்-சந்திரசேகர் இருவருமே சுத்தமாக பேசிக் கொள்வதே இல்லை என்றெல்லாம் கூறியிருந்தார்கள். அதற்கேற்ப சமீபத்தில் தன்னுடைய 80வது பிறந்தநாளை எஸ் ஏ சந்திரசேகர் கொண்டாடி இருந்தார். அதற்கு கூட விஜய் வரவில்லை என்றும், வாழ்த்து சொல்லவில்லை என்றும் நெட்டிசன்கள் விஜயை கடுமையாக விமர்சித்தனர். பின் வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் தன் பெற்றோர்களை கவனிக்கவில்லை என்று கூறி இருந்தார்கள்.

- Advertisement -

விஜய்-சந்திரேசகர் சண்டை:

பின் லியோ படகெட்டப்பில் விஜய் கீழே அமர்ந்திருக்க சோபா மேலே அமர்ந்திருக்கிறார். விஜய் தன்னுடைய தாயுடன் மட்டுமே புகைப்படம் எடுத்திருக்கிறார். ஆனால், சந்திரசேகர் உடன் எந்த புகைப்படமும் எடுக்கவில்லை. இதனால் விஜய்க்கு தன்னுடைய தந்தை மீது கோபம் குறையவில்லையா? வேற ஏதாவது காரணம் இருக்குமோ? என்றெல்லாம் நெட்டிசன்கள் புதிய கிளப்பி இருக்கிறார்கள். இருந்தாலும், இருவரும் இதை பற்றி கண்டுகொள்ளாமல் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

கிழக்கு வாசல் சீரியல்:

அந்த வகையில் தற்போது எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் கிழக்கு வாசல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலை ராதிகா சரத்குமார் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சீரியலில் ரேஷ்மா, ஏ எஸ் சந்திரசேகர், தினேஷ், வெங்கட் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கடந்த வாரம் தான் இந்த சீரியல் ஒளிபரப்பானது. தற்போது கிழக்கு வாசல் சீரியல் குறித்துதான் சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

சீரியலில் எஸ்ஏசி பேசிய வசனம்:

இந்நிலையில் கிழக்கு வாசல் சீரியலில் ஒரு சீனில் எஸ் ஏ சி, ஒருத்தன் அதிகமாக குடித்துவிட்டால் வாந்தி மயக்கம் எல்லாமே வரும். அதே போல தான் பணம் சேர்ந்து விட்டால் பழசை மறந்து விடுவார்கள். அது எப்படி வந்தது, எப்படி உருவானது என்றெல்லாம் யோசித்து பார்க்க மாட்டார்கள். பழசை மறக்க கூடாது என்று பேசி இருப்பார். அவர் சீரியலில் பேசி இருப்பது விஜய்க்காக தான் இப்படி எல்லாம் பேசி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்:

ஏற்கனவே விஜய் அவர்கள் சமீபத்தில் வெளிவந்த வாரிசு படத்தில் நடித்த காரணம் குடும்ப செண்டிமெண்ட் என்பதனால் என்று கூறி இருந்தார்கள். அதேபோல் தற்போது கிழக்கு வாசல் சீரியலில் எஸ்ஏ சந்திரசேகர் தன்னுடைய குடும்ப செண்டிமெண்டாக கதை இருப்பதால் தான் நடிக்கிறாரா? என்றெல்லாம் நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள். ஆக, மொத்தம் விஜயை ட்ரோல் பண்ணி ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள்.

Advertisement