அவரை நம்பி தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார் ? – சிம்புவின் செயலால் விஜய் தந்தை அதிருப்தி.

0
570
sac
- Advertisement -

மாநாடு வெற்றி விழாவிற்கு சிம்பு வராதது குறித்து எஸ் ஏ சந்திரசேகர் பேசிய கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் கடந்த நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Why Simbu's Maanaadu dropped? - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema  News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and  Diesel Rate in Chennai

மாநாடு மாபெரும் வெற்றி :

மேலும், படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் சிம்புவும், தனுஷ்கோடி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் மிரட்டி இருக்கிறார்கள். ஒரு நாளுக்குள் சிக்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் அதே நாளில் பயணிக்கும் டைம் லூப் கான்செப்ட்டை கொண்டு படமாக்கியிருக்கிறார் இயக்குனர். இந்த படம்படம் வெளியான முதல் நாளே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

- Advertisement -

மாநாடு வெற்றி விழா :

அதோடு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக கொண்டாடப்பட்டது என்று சொல்லலாம். இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி, ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தனர். இந்த விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட எஸ் ஏ சந்திரசேகர் கூறியது, இந்த படம் குறித்து நான் நிறைய பேட்டிகளில் பேசி இருக்கிறேன்.

சிம்பு மீது அதிருப்தி :

ஒரு படத்தின் வெற்றி கடைசியில் அந்த படத்தின் ஹீரோவுக்கு தான் போய் சேரும். இருந்தாலும் அந்த வெற்றிக்கு காரணம் இயக்குனரும், கதையும் என்பது தான் என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு நல்ல கதை யாரையும் உச்சத்துக்கு கொண்டு சேர்த்துவிடும். இந்த படம் ஹீரோவை உயரத்தில் கொண்டு போய் உட்கார வைத்திருக்கிறது. இது ஒரு உண்மையான வெற்றி.

-விளம்பரம்-

சிம்பு ஏன் வரவில்லை :

ஆனால், இந்த படத்தின் வெற்றி நாயகன் இந்த இடத்தில் இல்லாதது ஏன் என்று எனக்கு புரியவில்லை? என்ன தான் சூட்டிங் இருந்தாலும் இங்கே வந்திருக்க வேண்டும். என்னமோ தெரியவில்லை? எனக்கு புரியவில்லை? இந்த படம் அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பமாக அமைந்தது. இந்த மகிழ்ச்சியை நம்மோடு அவர் இங்கு வந்து கொண்டாடி இருக்க வேண்டும். இது கஷ்டமாக இருக்கிறது. அவரை நம்பி தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்?

அப்படிப்பட்ட ஒரு வெற்றியை கொண்டாட ஹீரோ இங்கே இருக்க வேண்டும். மேலும், படப்பிடிப்பின் போது எப்படி இருந்தோமோ? வெற்றிக்கு பின்பும் அப்படி இருக்க வேண்டும். அப்போது தான் இன்னொரு வெற்றி கிடைக்கும் என்று பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசிய கருத்துத் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு சிம்பு தரப்பில் இருந்து என்ன பதில் வரும்? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Advertisement