கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினையே காலில் விழு வைக்கும் நபர் யார் தெரியுமா.!

0
733
Sachin
- Advertisement -

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், கிரிக்கெட் உலகின் கடவும், லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என்று இவரரின் புகழ் இன்றளவும் கொடி கட்டி பறந்து வருகிறது. 90 காலகட்ட ரசிகர்கள் முதல் தற்போதுள்ள இளைய தலைமுறை வரை இவரை புகழாதவர்கள் இல்லை.

-விளம்பரம்-


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் ஆஸ்தான பயிற்சியாளராக இருந்து வந்தவர் தான் அச்ரேக்கர். 86-வயதான அச்ரேக்கர் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்து சமீபத்தில் காலமானார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் தவிர, அஜித் அகார்கர், சந்திரகாந்த் பண்டிட், வினோத் காம்ப்ளி, பிரவீன் அம்ரே ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கும் அச்ரேக்கர் பயிற்சியாளராக இருந்துள்ளார். 1932 ஆம் ஆண்டு பிறந்த அச்ரேக்கர் 1943-ஆம் ஆண்டு நியூ ஹிந்தி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் விளையாடத் துவங்கினார். 1963-64 கால கட்டத்தில் ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட் போட்டியில் மட்டும் அச்ரேக்கர் விளையாடியுள்ளார்.

தனது வழிகாட்டியை இழந்து விட்டோமே என்று சச்சின் டெண்டுல்கர் முகுந்த சோகத்தில் முழ்கியுள்ளார்.
அச்ரேக்கர் மறைவிற்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement