நடிகர் சூர்யா குறித்து இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டு இருக்கும் ட்வீட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
சூர்யா நடிக்கும் படங்கள்:
தற்போது சூர்யா அவர்கள் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதன் முறையாக சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கங்குவா என்று பெயர் இடப்பட்டது. இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
Tell us about this meeting ❤️❤️❤️@Suriya_offl @sachin_rt #AskSachin pic.twitter.com/un29AKqnjy
— 🆁🅾🆇 (@suriyaism_) April 21, 2023
கங்குவா படம்:
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் 3டில் உருவாக இருக்கிறது. இந்த படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் வகையில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் பான் இந்திய படமாக 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.
சச்சின்-சூர்யா சந்திப்பு:
இந்த நிலையில் சூர்யா குறித்து சச்சின் பதிவிட்டு இருக்கும் ட்வ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் சூர்யா அவர்கள் மும்பையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்து இருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது சச்சின் டெண்டுல்கரும் ரசிகர்களுடைய கேள்விக்கு சோசியல் மீடியாவில் பதில் அளித்திருக்கிறார்.
We both were very shy initially and didn't want to disturb each other but ended up having a good chat. #MutualAdmiration @Suriya_offl https://t.co/Q7tNqoahNe
— Sachin Tendulkar (@sachin_rt) April 21, 2023
சச்சின் பதிவு:
அப்போது ரசிகர் ஒருவர் சூர்யா- சச்சின் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இது குறித்து சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு சச்சின், நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் பேசுவதற்கு தயக்கமாக இருந்தோம். ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனால், இறுதியில் இருவரும் நன்றாக பேசிக் கொண்டோம் என்று கூறியிருக்கிறார். இப்படி சூர்யா குறித்து சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்திருக்கும் ட்வீட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.