எனக்கும் தொலைபேசி மூலம் அந்த மாதிரியான அழைப்புகள் வந்துள்ளது.! நடிகை சதா விளக்கம்.!

0
1809
- Advertisement -

சினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பல காலமாக இருந்து வருகிறது. இதுவரை காஸ்டிங் கௌச் என்பதை பற்றி எந்த நடிகையும் வெளிப்படையாக பேசாமல் இருந்தனர். ஆனால், தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பின்னர் பல்வேறு நடிகைகளிடம் காஸ்டிங் கௌச் குறித்து கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Sri Reddy
Sri Reddy

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சதாவிடம் காஸ்டிங் கௌச் குறித்து கேள்வி கேட்ப்பட்டது. அப்போது பேசிய நடிகை சதா, எனது பெற்றோர்கள் எப்போதும் என்னோடனே இருந்து வருவதால் எனக்கு நேரடியாக பாலியல் தொல்லைகள் வந்தது கிடையாது, ஆனால், தொலைபேசி மூலம் பல முறை முறைமுகமாக என்னை படுக்கைக்கு அழைத்துள்ளனர்.

- Advertisement -

ஆனால், என்னிடம் அப்படி யாராவது தவறாக அணுகுகிறார்கள் என்று நான் உணர்ந்தால் அது போன்ற செல் போன் அழைப்புகளை நான் தவிர்த்து விடுவேன். பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் எல்லா துறைகளில் இருந்து வருகிறது. ஆனால், சினிமாவில் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வேண்டும் என்பதை பயன்படுத்தி இது போன்ற தவறுகளை செய்து விடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

sadha

-விளம்பரம்-

நடிகை சதா தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நடிகை சதா, தற்போது இயக்குனர் மஜித் இயக்கும் ‘டார்ச்லைட் ‘ என்ற படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்துள்ளார். அந்த படம் குறித்து பேசியுள்ள நடிகை சதா, இந்த படத்தில் வெறும் விபச்சாரம் மட்டும் இருக்காது.விபச்சாரம் செய்யும் பெண்களின் வாழக்கைக்கு பின்னால் இருக்கும் வலிகள், போராட்டங்கள் போன்றவை இந்த படத்தில் முக்கியமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement