குழந்தை பெற இருந்தும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு நான் விருது கொடுப்பேன் – ராம் சரண் மனைவிக்கு சத்குரு கொடுத்த பதில்.

0
513
sadhguru
- Advertisement -

திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று எழுந்த சர்ச்சைக்கு ராம்சரண் மனைவி அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

ராம் சரண் அவர்கள் நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். அதேபோல் இவருடைய நடிப்பில் வந்த மாவீரன், ரங்கஸ்தலம் போன்ற படங்கள் எல்லாம் பல மொழிகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.சமீபத்தில் நடிகர் ராம் சரண் அவர்கள் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் ராம் சரணுடன் பிரபலமான நடிகர் ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடித்து இருந்தார். இரண்டு மாஸ் ஹீரோக்கள் இணைந்து இந்த படத்தில் கலக்கி இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் ராம் சரண் போலீசாக மிரட்டியிருப்பார்.

- Advertisement -

ராம்சரண் திரை பயணம்:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து ராம்சரண் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் உருவாக்கி வருகிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமணமாகி பல ஆண்டு கடந்தும் குழந்தை இல்லை என்று எழுந்த சர்ச்சைக்கு ராம்சரன் மனைவி அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ராம்சரண்-உபாசனா குழந்தை குறித்த சர்ச்சை:

நடிகர் ராம்சரண் அவர்கள் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும், தெலுங்கு திரையுலகில் தம்பதிகளாக இருவரும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதோடு இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே தான் இருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ராம்சரனின் மனைவி ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர், எனக்கும் என் கணவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.

-விளம்பரம்-

சத்குரு அளித்த பதில்:

என்னுடைய RRR குறித்து (realationship, reproduce, role in life ) உறவுகள், குழந்தை பெற்றுக் கொள்ளும் திறன், வாழ்க்கையில் எனது பங்களிப்பு குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு நீங்கள் சொல்வது என்று கேட்டிருந்தார். அதற்கு சத்குரு கூறி இருந்தது, குழந்தை பெற்றுக் கொள்ள உங்களுக்கு தகுதி இருந்தும் நீங்கள் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்றால் நான் விருது தருகிறேன். உண்மையில் நிறைய இளம் பெண்களுக்கு நான் இதுபோல விருது அளித்து உள்ளேன். தகுதி இருந்தும் குழந்தை பெற்று கொள்ளாமல் இருந்தால் அந்த முடிவை நான் பாராட்டுவேன். இப்போதைக்கு நாம் பூமிக்கு செய்யும் சேவை இதுதான். மனித இனம் ஒன்றும் அழிந்து விடப்போவதில்லை. அளவுக்கு அதிகமாகவே இருக்கிறோம்.

ராம்சரண் அளித்த பேட்டி:

எனவே குழந்தை பெற்று கொள்ள விரும்பாத பெண்களை வரவேற்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் இது குறித்து ஏற்கனவே ராம்சரண் பேட்டி ஒன்றில் கூறியிருந்து, சிரஞ்சீவியின் வாரிசாக மக்களை மகிழ்விக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. எனக்கு என்று சில இலக்குகள் இருக்கின்றது. அதேபோல் என்னுடைய மனைவிக்கும் இலக்குகள் இருக்கின்றது. குழந்தை பிறந்து விட்டால் நாங்கள் இருவரும் இலக்கில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் நாங்கள் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. சில வருடங்கள் கழித்து இது குறித்து யோசிப்போம் என்று கூறியிருந்தார்.

Advertisement