அனிரூத்தை விமர்சித்து சாய் அபயங்கர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாவில் இந்த ஆண்டில் ட்ரெண்டிங்கில் இருந்த பாடல் கட்சி சேர, ஆசை கூட. இந்த பாடல்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் சாய் அபயங்கர். ‘ஜென் சி’ என்ற மோடில் அமைந்த இந்த பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது.

இதன் மூலம் தான் தற்போது இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும், 2k தலைமுறையினரின் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 2கே கிட்ஸ்களுக்கு பேவரட் என்றால் அனிரூத் தான். அவருக்குப் பிறகு தற்போது ரசிகர்கள் மத்தியில் பேவரட் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருக்கு 20 வயது தான்.
சாய் அபயங்கர் பற்றிய தகவல்:
இவர் பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு மற்றும் ஹரணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இன்னும் ஒரு படத்தில் கூட இவருடைய பாடல்கள் வெளியாகவில்லை. இருந்தாலுமே, இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் பென்ஸ் என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.
View this post on Instagram
சாய் அபயங்கர் திரைப்பயணம்:
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹரோவாக நடிக்கிறார். அது மட்டுமில்லாமல் இந்த படம் லோகேஷின் எல்.சி.யுல் வரும் என்று ஏற்கனவே அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார்கள். இதற்கு முன்பு லோகேஷின் படங்களுக்கு அனிருத், சாம் சி எஸ் தான் இசையமைத்திருந்தார்கள். ஆனால், இப்போது லோகேஷின் யுனிவர்சில் புது இசையமைப்பாளராக சாய் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
காரி துப்பிட்டான் அனிருத்த 🤣 pic.twitter.com/lhH36Vv11v
— 🥶. (@KuskithalaV6) December 28, 2024
சாய் பேட்டி:
இதைத்தொடர்ந்து சாய் அவர்கள் சூர்யா- 45, பிரதீப் ரங்கநாதன் படம் என அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அனிரூத்தை விமர்சித்து சாய் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், பிரபல பாடகர் ஒருவர் குக்ஹும் பாட்டு போட்டு நடந்து வந்து ஹிட் ஆயிடுச்சுன்னா அந்த பாட்டு பிரபலம் என்று சொல்கிறார்கள். ஆனால், அது அப்படி கிடையாது.
இந்த தெளிவு கூட இல்லை..🙃
— இசை விரும்பி (@IyarkaiTay) December 27, 2024
அந்த So Called பாறைநட்சத்திர 🎸 காரருக்கு 😅😂😂 #VidaaMuyarchiFirstSingle pic.twitter.com/4tqp2gq39N
அனிரூத்தை விமர்சித்த காரணம்:
ஹூக் என்ற வார்த்தைக்கு அந்த பாடல் ஹிட் என்று சொல்வது சரியில்லை. ஆனால், நான் பாடலை குறை சொல்லவில்லை. ஒரு வாரத்தில் ஏழு இண்டிபெண்டன் பாடல்கள் வந்தது என்றால் அந்த பாடல் காணாமல் போய்விடும். பாடல் என்பது கடைசி வரை மக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இவர் அனிரூத் பாடலை தான் விமர்சித்து பேசுகிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. தற்போது இதை தான் நெட்டிசன்கள் இணையத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள்






